
காதலர் தினம்: காதலில் தொடங்கி கல்யாணம் வரை சென்ற தமிழ் திரைப்பட பிரபலங்கள்
செய்தி முன்னோட்டம்
பிரபலங்களை பற்றி அறிவதில்,அனைவருக்கும் ஆர்வம் இருக்கும். குறிப்பாக, அவர்களின் காதல் வாழ்க்கை, திருமண முடிவுகள் போன்றவற்றில். அதிலும் நீங்கள் மிகவும் நேசிக்கும் இரு பெரும் நட்சத்திரங்கள் திருமண பந்தத்தில் இணையும் போது, அது இரட்டிப்பு மகிழ்ச்சியே. அப்படி, காதலில் தொடங்கி, இல்லறத்தில் இணைந்த தமிழ் திரைப்பட நட்சத்திரங்களின் பட்டியல் இது:
ரஜினிகாந்த- லதா: 1981ஆம் ஆண்டு, ரஜினிகாந்த், லதாவை காதலித்து, திருப்பதியில் திருமணம் செய்துகொண்டார்.
அஜித்- ஷாலினி: 'அமர்க்களம்' படத்தின் மூலம் அறிமுகமாகி, காதல் வயப்பட்டு, 2000ல் திருமணம் செய்து கொண்டனர்.
சூர்யா-ஜோதிகா: பல ஆண்டுகளாக ரகசியமாக காதலித்து, 2006-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் காதல் செய்தி, ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக அமைந்தது.
ட்விட்டர் அஞ்சல்
அஜித்- ஷாலினி திருமணம்
Nostalgic Golden moments - Ajith Kumar and Shalini marriage pics https://t.co/SfW6BIDXwb pic.twitter.com/ma6rLXFBCq
— Behindwoods (@behindwoods) April 6, 2016
ட்விட்டர் அஞ்சல்
ரஜினிகாந்த- லதா திருமணம்
Thalaivar @rajinikanth marriage reception album! #HappyWeddingAnniversary pic.twitter.com/XqI8IXSyrN
— RBSI RAJINI FAN PAGE (@RBSIRAJINI) February 26, 2021
தமிழ் சினிமா
காதலில் வெற்றி கண்ட திரைநட்சத்திரங்கள்
சினேகா-பிரசன்னா: 2009 ஆம் ஆண்டு, 'அச்சமுண்டு அச்சமுண்டு' படத்தில் இருவருக்கும் காதல் மலர்ந்து, 2012 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்கள்.
குஷ்பூ- சுந்தர்.சி: 'முறைமாமன்' படத்தின் ஷூட்டிங்கின் போதே இருவருக்குள்ளும் காதல் மலர்ந்தது. பின்னர், 2000ம் ஆண்டு இவர்கள் திருமணம் செய்துகொண்டனர்.
ஆர்யா- சயீஷா: கஜினிகாந்த் படத்தின் போது காதல் கொண்ட இருவரும், 2019ல் திருமணம் செய்து கொண்டனர்.
விக்னேஷ் சிவன்- நயன்தாரா: நானும் ரவுடி தான் படப்பிடிப்பில் துவங்கிய காதல், பல ஆண்டுகளுக்கு பிறகு, கடந்த ஆண்டு திருமண பந்தத்தில் இணைந்தது.
கவுதம் கார்த்திக்- மஞ்சிமா: இந்த பட்டியலில் புதிதாக இணைந்திருப்பது இந்த ஜோடி. தேவராட்டம் படத்தில் காதலிக்க துவங்கிய இவர்கள், சென்ற ஆண்டு நவம்பர் மாதம் திருமணம் செய்துகொண்டனர்.
ட்விட்டர் அஞ்சல்
கவுதம் கார்த்திக்- மஞ்சிமா திருமணம்
K-Town's newly married couple @Gautham_Karthik and @mohan_manjima @DoneChannel1 #GautamKarthik #ManjimaMohan #CelebrityNews #CelebrityUpdate #Kollywood #KollywoodCinema #TamilCinema #KollywoodCouple #wedding #weddingpicture #ECR #Chennai pic.twitter.com/90rPgw4DuW
— DT Next (@dt_next) November 28, 2022
ட்விட்டர் அஞ்சல்
ஆர்யா-சயீஷா திருமணம்
Here is another picture from @arya_offl-@sayyeshaa #weddings @VishalKOfficial @khushsundar @soundar4uall #SundarC #AryawedsSayyeshaa #Arya #sayeesha pic.twitter.com/i8T7mczv66
— Trending on Internet (Tamil) (@trendtnnow) March 11, 2019