LOADING...
இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் தென்னிந்திய திரைப்படங்கள் - முழு லிஸ்ட்!
தென்னிந்திய மொழி படங்கள் பல இந்த வாரம் வெளியாகிறது

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் தென்னிந்திய திரைப்படங்கள் - முழு லிஸ்ட்!

எழுதியவர் Venkatalakshmi V
Oct 23, 2025
12:08 pm

செய்தி முன்னோட்டம்

இந்த வாரம் பல தென்னிந்திய திரைப்படங்கள் ஓடிடி தளங்களில் வெளியாகின்றன. ரொமான்ஸ், திரில்லர், ஆக்ஷன் என பல வகை படங்கள் இந்த வார இறுதியில் உங்கள் வீட்டிலேயே நீங்கள் பார்த்து என்ஜாய் செய்ய வருகின்றன. தமிழ், தெலுங்கு, கன்னடம் என தென்னிந்திய மொழி படங்கள் பல இந்த வாரம் வெளியாகிறது. இதோ பட்டியல்:

தமிழ் 

ஓடிடியில் வெளியாகவுள்ள தமிழ் திரைப்படங்கள்

'Accused': இயக்குநர் ஏ.எல்.விஜய்யின் சகோதரர் உதயா ஹீரோவாக நடித்துள்ள 'Accused' திரைப்படத்தை கன்னட இயக்குநர் பிரபு ஸ்ரீநிவாஸ் இயக்கியுள்ளார். யோகி பாபு முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார். ஒரு போலீஸ் அதிகாரி குற்றவாளியை பேருந்தில் சிறைக்கு அழைத்துச் செல்லும் போது, அவரை கொலை செய்யும் முயற்சிகள் நடைபெறும். இதை மையப்படுத்திய த்ரில்லர் படம் இது. இப்படம் நாளை, Aha-ல் வெளியாகிறது. பறை இசை நாடகம்: பறை இசைக்கலைஞர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்ட எடுக்கப்பட்ட பயோகிராஃபி திரைப்படம், நாளை, Sun NXT-இல் வெளியாக உள்ளது. 'சக்தி திருமகன்': நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி நடித்துள்ள இந்த படம், கடந்த மாதம் 19ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ஆக்ஷன்-திரில்லர் கதைக்களத்தில் அமைந்த இப்படம் நாளை, ஜியோஹாட்ஸ்டாரில் வெளியாகிறது.

OTT

மற்ற மொழி திரைப்படங்கள்

'They Call Him OG': தெலுங்கு திரையுலகின் சூப்பர்ஸ்டார் நடிகரும், ஆந்திராவின் துணை முதல்வருமான பவன் கல்யாண் நடிப்பில் வெளிவந்த இந்த படம் பெரும் வரவேற்பை பெற்றது. இப்படம் இன்று, Netflix- இல் வெளியிடப்பட்டுள்ளது. கிஷ்கிந்தாபுரி: தெலுங்கில் வெளியான இந்த ஹாரர் திரைப்படத்தில் அனுபமா பரமேஸ்வரன் மற்றும் சாய் ஸ்ரீனிவாஸ் பெல்லம்கொண்டா முன்னணி வேடங்களில் நடித்துள்ளனர். இது தற்போது தமிழ் டப்பிங்கில் நாளை ZEE5 -யில் வெளியாகிறது. Jumbo Circus: கன்னடத்தில் வெளிவந்த ரொமான்டிக் திரைப்படம் 'Jumbo Circus', கடந்த மாதம் 12ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்படம் நாளை Sun NXT ஓடிடியில் வெளியாகிறது.