Page Loader
மும்பையில் சொந்தமாக வீடு வைத்திருக்கும் தமிழ் திரை பிரபலங்கள் பட்டியல்
நடிகர் தனுஷும், மாதவனும் பல ஆண்டுகளுக்கு முன்னரே மும்பையில் வீடு வாங்கி விட்டனர்

மும்பையில் சொந்தமாக வீடு வைத்திருக்கும் தமிழ் திரை பிரபலங்கள் பட்டியல்

எழுதியவர் Venkatalakshmi V
Mar 27, 2023
12:56 pm

செய்தி முன்னோட்டம்

சமீபத்தில், நடிகர் சூர்யா மும்பையில் வீடு வாங்கி குடிபெயர்ந்ததாக செய்திகள் வெளி வந்தன. இது குறித்து சூர்யா தரப்பிலோ, ஜோதிகா தரப்பிலோ எந்த ஒரு விளக்கமும் தரப்படவில்லை. எனினும் அவ்வப்போது, சூர்யா மும்பைக்கு சென்று வருகிறார் என்பது சமூக வலைத்தளத்தில் வெளியாகும் புகைப்படங்களில் இருந்து அறிந்து கொள்ளலாம். ஜோதிகாவும், மும்பையில் குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றையும் சில மாதங்களுக்கு முன்னர் பகிர்ந்திருந்தார். சூர்யா மும்பைக்கு குடி பெயர பல காரணங்கள் கூறப்படும் இந்த வேளையில், அவரை போலவே, மும்பையில் வீடு வாங்கி இருக்கும் மற்ற தமிழ் திரைப்பிரபலங்கள் பட்டியல் இதோ: தமன்னா: இவரும் மும்பைவாசி. ஆனாலும், தற்போதுதான் ஹிந்தி படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளதால், அங்கு வீடு வாங்கியுள்ளார் என செய்திகள் தெரிவிக்கின்றன.

கோலிவுட் பிரபலங்கள்

தனுஷ் முதல் காஜல் அகர்வால் வரை:

தனுஷ்: தனுஷ் பாடிய 'கொலவெறி' பாடல், பட்டிதொட்டி எங்கும் பிரபலம் ஆனதும், அவருக்கு ஹிந்தி பட வாய்ப்பு கிடைத்தது. அப்போது அவர், அங்கு ஒரு வீடு வாங்கியுள்ளார். மற்ற நட்சத்திரங்கள், கதை கேட்பதற்கு ஸ்டார் ஹோட்டல்களை தேர்ந்தெடுத்த காலத்தில், இயக்குனர்களை வீட்டிற்கு அழைத்து கதை கேட்ட விதம், தனுஷிற்கு, பாலிவுடில் நல்ல பெயரை வாங்கி தந்தது. மாதவன்: இவர் மாடலிங் துறையில் நுழைந்தபோதே, மும்பையில் வீடு வாங்கிவிட்டார். அலைபாயுதே படத்திற்கு பிறகு கொஞ்ச காலம் சென்னையில் இருந்தவர், தற்போது மீண்டும் மும்பைக்கே சென்றுவிட்டார். காஜல் அகர்வால்: இவர் 2020-இல் மும்பையில் வீடு வாங்கி, தனது திருமணத்திற்கு பின்னர், கணவருடன் அங்கு வசித்து வருகிறார். தென்னிந்தியா திரைப்படங்கள் நடிப்பதற்கு, அங்கிருந்து தான் பறந்து வருகிறார்.