ஐஸ்வர்யா ராய் முதல் சச்சின் டெண்டுல்கர் வரை: அம்பானி வீட்டு விசேஷத்தில் பங்கு பெற்ற பிரபலங்களின் பட்டியல்
அம்பானி சாம்ராஜ்யத்தில் ஒருவரான, முகேஷ் அம்பானியின் இளைய மகனான, ஆனந்த் அம்பானிக்கும், ராதிகா மெர்ச்சண்ட்டுக்கும் நேற்று நிச்சயதார்த்தம் நடந்தது. மும்பையில் அமைந்துள்ள அம்பானியின் வீட்டில் தான் இந்த விசேஷம் நடைபெற்றது. இவ்விழாவில் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். அவர்களின் பட்டியல் இதோ: சச்சின் டெண்டுல்கர்: கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரும், அவரது மனைவி அஞ்சலியும் கலந்துகொண்டனர். இருவரும் பாரம்பரிய உடை அணிந்திருந்தனர். ஐஸ்வர்யா ராய்: அம்பானியின் இல்ல நிகழ்ச்சிகள் அனைத்திலும், அமிதாப் பச்சன் குடும்பம் கலந்து கொள்வார்கள். அதன்படி, நடிகை ஐஸ்வர்யா ராய், தனது மகளுடன் வந்திருந்தார். ஷாருக்கான்: கருப்பு நிற ஷெர்வானி அணிந்து வந்தார் 'பாலிவுட்டின் பாட்ஷா' என அழைக்கப்படும் ஷாருக்கான். அவரது மனைவி கவுரி கானும், மகன் ஆர்யனும் வந்திருந்தனர்.
பாலிவுட் பிரபலங்கள் கலந்து கொண்ட விழா
இயக்குனர் கரண் ஜோஹர், ஆர்யன் முகர்ஜீ: இயக்குனரும் தயாரிப்பாளருமான கரண் ஜோஹர் வந்திருந்தார். அவருடன் ப்ரஹ்மாஸ்திரா பட இயக்குனரான ஆர்யன் முகர்ஜீயும் வந்திருந்தார். அக்ஷய் குமார்: 'எந்திரன்' பட வில்லனான அக்ஷய் குமார், அடர் சிவப்பு நிற ஷெர்வானி அணிந்து வந்திருந்தார். ஜான்வி & குஷி கபூர்: போனி கபூர்-ஸ்ரீதேவியின் மகளான ஜான்வி கபூர், தனது தங்கை குஷி கபூருடன் வந்திருந்தார். மேலும், போனி கபூரின் மகனான அர்ஜுன் கபூர், தனது நண்பர்களுடன் வந்திருந்தார். கிரண் ராவ்: நடிகர் அமீர் கானின் முன்னாள் மனைவியான கிரண் ராவ்வும் வந்திருந்தார். இவர் நடிகை அதிதி ராவ்வின் உறவினர் ஆவர். ஷ்ரேயா கோஷல்: திரைப்பட பாடகி ஷ்ரேயா கோஷலும் இநிகழிச்சியில் கலந்து கொள்ள வந்திருந்தார்.