Page Loader
த்ரிஷா இடம்பெற்றுள்ள லியோ பட போஸ்டரை வெளியிட்டது பட குழு
லியோ திரைப்படம் விஜய்- த்ரிஷா கூட்டணியில் உருவாகும் ஐந்தாவது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

த்ரிஷா இடம்பெற்றுள்ள லியோ பட போஸ்டரை வெளியிட்டது பட குழு

எழுதியவர் Srinath r
Oct 05, 2023
12:58 pm

செய்தி முன்னோட்டம்

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய், த்ரிஷா, அர்ஜுன் சஞ்சய் தத் உள்ளிட்டோர் நடிக்கும் லியோ திரைப்படம் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாகிறது. இந்நிலையில் லியோ திரைப்படத்தின் டிரைலர் இன்று வெளியாகும் என படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்தது. தற்போது லியோ படத்தில் த்ரிஷா இடம் பெற்றுள்ள போஸ்டரை படக் குழு வெளியிட்டுள்ளது. கண்களில் பயத்துடனும், முகத்தில் தெறித்துள்ள ரத்தத்துடனும் த்ரிஷா அதிர்ச்சியில் உறைந்திருக்கும் காட்சியை போஸ்ட்ராக பட குழு வெளியிட்டுள்ளது. லோகேஷ் கனகராஜ் திரைப்படங்களில் நாயகிகளுக்கு பெரும் முக்கியத்துவம் இருக்காது எனவும், நாயகி திரைப்படத்தின் நடுவில் இறந்து விடுவார் எனவும் ரசிகர்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

ட்விட்டர் அஞ்சல்

படக்குழு வெளியிட்டுள்ள த்ரிஷாவின் போஸ்டர்