Page Loader
தமிழ் சினிமாவின் பிரபல பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
'பன்னீர் புஷ்பங்கள்' திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார் உமா ரமணன்

தமிழ் சினிமாவின் பிரபல பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்

எழுதியவர் Venkatalakshmi V
May 02, 2024
06:53 am

செய்தி முன்னோட்டம்

தமிழ் சினிமாவின் பிரபல பாடகி உமா ரமணன் நேற்று காலமானார். அவருக்கு வயது 69. கடந்த சில மாதங்களாக உமா ரமணன் உடலநலம் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று இரவு காலமானார். இவரது கணவர் ரமணனும் பிண்ணனி பாடகர் தான். சன் டிவியில் ஒளிபரப்பான சப்த ஸ்வரங்கள் நிகழ்ச்சியின் தொகுப்பாளராக இருந்துள்ளார். அதோடு 'பாய்ஸ்' உள்ளிட்ட சில அவர் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். உமா ரமணனின் திடீர் மறைவிற்கு திரை உலகத்தினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். உமா ரமணன், 1980-ஆம் ஆண்டு வெளியான 'பன்னீர் புஷ்பங்கள்' திரைப்படம் மூலமாக தமிழ் சினிமா துறையில் காலடி எடுத்து வைத்தார். அப்படத்தில் இடம்பெற்ற 'ஆனந்தராகம்' பாடல் அவரை பட்டிதொட்டி எங்கும் பிரபலப்படுத்தியது எனக்கூறலாம்.

embed

Twitter Post

#BREAKING | தமிழ் திரைப்பட பின்னணிப் பாடகி உமா ரமணன் (69) காலமானார்.#SunNews | #UmaRamanan pic.twitter.com/pCY4iLTyxH— Sun News (@sunnewstamil) May 1, 2024