தமிழ் சினிமாவின் தலையெழுத்தை மாற்றிய 'இயக்குனர் இமயம்' பாரதிராஜாவின் டாப் 15 காவியங்கள்
செய்தி முன்னோட்டம்
தமிழ் சினிமாவை ஸ்டுடியோக்களின் நான்கு சுவர்களுக்குள் இருந்தும், நாடகத்தனமான வசன அமைப்புகளில் இருந்தும் விடுவித்து, நிஜமான மனிதர்களோடும், மண்வாசனையோடும் கேமராவை கிராமங்களுக்குக் கொண்டு சென்றவர் 'இயக்குனர் இமயம்' பாரதிராஜா. அவரது மறைவு தமிழ் திரையுலகிற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாக அமைந்தாலும், அவர் விட்டுச் சென்றுள்ள திரையுலகப் பொக்கிஷங்கள் காலம் கடந்து அவரது பெயரைச் சொல்லிக்கொண்டே இருக்கும். கிராமத்துக் காதல் முதல் நகரத்து சைக்கோ த்ரில்லர் வரை தமிழ் சினிமாவின் போக்கையே மாற்றியமைத்த பாரதிராஜாவின் மிக முக்கியமான காவியப் படைப்புகள் இதோ:
படைப்புகள் #1
காவியப் படைப்புகள் #1
16 வயதினிலே: பாரதிராஜாவின் முதல் படமே தமிழ் சினிமாவின் புதிய மைல்கல்லாக அமைந்தது. டிப்டாப் ஹீரோவாக வலம் வந்த கமல்ஹாசனை வெற்றுடம்பில் கோவணத்துடன் 'சப்பாணி' ஆக்கினார். ரஜினிகாந்தை 'பரட்டை' ஆக்கி, "இது எப்படி இருக்கு?" என்ற உலகப் புகழ்பெற்ற வில்லன் வசனத்தைக் கொடுக்க வைத்தார். ஸ்ரீதேவியின் 'மயிலு' கதாபாத்திரம் இன்றுவரை தமிழ் நெஞ்சங்களின் ஃபேவரிட். கிழக்கே போகும் ரயில்: இதன் மூலம் ராதிகா சரத்குமார் திரையுலகிற்கு அறிமுகமானார். சிகப்பு ரோஜாக்கள் (1978) "பாரதிராஜாவால் கிராமத்துப் படங்களை மட்டும்தான் எடுக்க முடியும்" என்ற விமர்சனங்களை சுக்குநூறாக உடைத்த படம். பெண்களை வெறுக்கும் ஒரு சைக்கோ கொலையாளியாகக் கமல்ஹாசனை முற்றிலும் மேற்கத்திய பாணியில் காட்டி, தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த க்ரைம் த்ரில்லராக இதை மாற்றினார்.
படைப்புகள் #2
காவியப் படைப்புகள் #2
நிழல்கள், அலைகள் ஓய்வதில்லை (கார்த்திக் மற்றும் ராதா ஆகிய இரு பெரும் நட்சத்திரங்களை இந்த ஒரே படத்தின் மூலம் பாரதிராஜா தமிழ் சினிமாவிற்குத் தாராளமாக வாரி வழங்கினார்); டிக் டிக் டிக், முதல் மரியாதை, கடலோர கவிதைகள், வேதம் புதிது, கருத்தம்மா உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார்.
அறிமுகங்கள்
இயக்குனர் பாரதிராஜாவின் அறிமுகங்கள்
ராதிகா, ரேவதி, ராதா, கார்த்திக், ப்ரியாமணி, பாண்டியன் உள்ளிட்ட பலரை தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் செய்த பெருமை பாரதிராஜாவிற்கே உண்டு. இவர்களை தவிர பாக்யராஜ், பாண்டியராஜன் உள்ளிட்ட பல இயக்குனர்களை செதுக்கியவரும் இவரே. SJ சூர்யாவும் சில நாட்கள் இவரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார் என செய்திகள் கூறுகின்றது. இயக்குனர் பாரதிராஜா நடிக்கும் ஆசையாலேயே சென்னை வந்தார். இயக்கத்தில் தன்னுடைய முத்திரையை பதித்தபின்னர், பிற்காலத்தில் 'ஆயுத எழுத்து', 'பாண்டிய நாடு', 'குரங்கு பொம்மை', 'திருச்சிற்றம்பலம்', 'மகாராஜா' எனப் பல திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து ஒரு சிறந்த நடிகராகவும் தன்னை நிரூபித்தார் 'இயக்குனர் இமயம்'.