அடுத்த செய்திக் கட்டுரை

சாமி படத்தின் வில்லன் மரணமா? வெளியான வீடியோ!
எழுதியவர்
Venkatalakshmi V
Mar 21, 2023
07:12 pm
செய்தி முன்னோட்டம்
விக்ரம் நடிப்பில், ஹரி இயக்கத்தில் வெளியான ஹிட் படம் தான் 'சாமி'. இந்த படத்தில் 'பெருமாள் பிச்சை' என்ற கதாபாத்திரத்தில் வில்லனாக நடித்ததன் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானவர், பழம்பெரும் தெலுங்கு நடிகர் கோட்டா ஸ்ரீனிவாச ராவ்.
இன்று காலை, ஸ்ரீனிவாச ராவ் மரணமடைந்ததாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகின.
திரையுலகமும், அவரின் ரசிகர்கள் இதை கேட்டு, கடும் அதிர்ச்சிக்கு ஆளாகினர்.
இந்நிலையில், தான் நன்றாக இருப்பதாகவும், தேவை இல்லாமல் வதந்திகளை பரப்ப வேண்டாம் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
இவரின் மரண செய்தி கேட்டு, கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக, காலையில் போலீஸ்காரர்களும் வந்து விட்டனராம். கிட்டத்தட்ட 50 போன் கால் வேறு, இவரின் அலைபேசிக்கு வந்ததாம்.
ட்விட்டர் அஞ்சல்
கோட்டா சீனிவாச ராவ் வீடியோ
#kottasrinivasarao https://t.co/tLR6rlSZqi
— Tamil News 24/7 (@tamilnews1234) March 21, 2023