NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / 'தி லெஜண்ட்' திரைப்படம் ஓடிடி-யில் வெளியாகிறதா?
    பொழுதுபோக்கு

    'தி லெஜண்ட்' திரைப்படம் ஓடிடி-யில் வெளியாகிறதா?

    'தி லெஜண்ட்' திரைப்படம் ஓடிடி-யில் வெளியாகிறதா?
    எழுதியவர் Saranya Shankar
    Jan 05, 2023, 06:15 pm 1 நிமிட வாசிப்பு
    'தி லெஜண்ட்' திரைப்படம் ஓடிடி-யில் வெளியாகிறதா?
    ‘தி லெஜண்ட்' படத்தின் போஸ்டர்

    சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் லெஜண்ட் சரவணன். இவர் தனது கடையின் விளம்பரத்திற்காக சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரங்களில் அடிக்கடி நடித்து வந்தார். அதன் பின்னர் இவர் முதன்முதலாக தயாரித்து ஹீரோவாக நடித்த திரைப்படம் 'தி லெஜண்ட்.' இப்படத்தினை ஜேடி-ஜெர்ரி அவர்கள் இயக்கினர். மேலும் ஹாரிஸ் ஜெயராஜ் இப்படத்திற்கு இசையமைத்தார். இப்படத்தின் லெஜண்ட் சரவணனுக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுத்தலா நடித்து இருந்தார்கள். மேலும் இப்படத்தில் விவேக், தேவதர்ஷினி, ரோபோ ஷங்கர் ஆகியோர் நடித்துள்ளனர். நகைச்சுவை நடிகர் இறப்பதற்கு முன்பு நடித்த கடைசி திரைப்படம் இதுவாகும். பெரிய பட்ஜெட்டில் மிக பிரம்மாண்டமாய் எடுக்கப்பட்ட இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளிவந்தது.

    'தி லெஜண்ட்' குறித்து லெஜண்ட் சரவணனின் ட்விட்டர் பதிவு

    2022-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 28-ந்தேதி 'தி லெஜண்ட்' திரைப்படம் சுமார் 2500 திரையரங்குகளில் வெளியானது. இந்த படம் வசூல் ரீதியாக படுதோல்வியை சந்தித்தது. இருப்பினும் விமர்சன ரீதியில் கலவையான விமர்சனங்களை பெற்றுது. இந்நிலையில் இப்படத்தின் ஓடிடி உரிமையை இவர் எந்த நிறுவனத்திற்கும் விற்க முன்வரவில்லை என கூறப்பட்டது. ஆனால் சமூக வலைத்தளங்களில் இது குறித்து இவரின் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்ததிருந்தனர். இந்நிலையில் இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்து இவர் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் "நீங்கள் அனைவரும் காணும் வகையில் 'தி லெஜண்ட்' விரைவில்..." என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இது படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்து வெளியான அறிவிப்பாக இருக்கலாம் என ரசிகர்கள் இந்த பதிவினை பகிர்ந்தது வருகிறார்கள்.

    லெஜண்ட் சரவணனின் ட்விட்டர் பதிவு

    நீங்கள் அனைவரும் காணும் வகையில் ‘தி லெஜண்ட்’ விரைவில்…#TheLegend #LegendSaravanan pic.twitter.com/RbIzAbC3dw

    — Legend Saravanan (@yoursthelegend) January 1, 2023
    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    சமீபத்திய
    ஓடிடி
    தமிழ் திரைப்படம்

    சமீபத்திய

    கேம் பிரியர்களுக்காக வரும் ASUS ROG Phone 7 - என்ன எதிர்பார்க்கலாம்? ஸ்மார்ட்போன்
    ரூ.2 லட்சம் மதிப்பிலான ஜாக்கெட்டை அணிந்திருந்த வட கொரிய அதிபரின் மகள் வட கொரியா
    காஷ்மீருக்கு செல்லும் முதல் ரயில் பாதை டிசம்பரில் திறக்கப்படும்: ரயில்வே அமைச்சர் ஜம்மு காஷ்மீர்
    வெற்றி மாறன் இயக்கத்தில் சூரி நடிக்கும் 'விடுதலை' படத்தின் மேக்கிங் வீடியோ வெற்றிமாறன்

    ஓடிடி

    இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள் என்னென்ன?! தமிழ் திரைப்படங்கள்
    'அகிலன்','அயோத்தி' படங்களின் OTT ரிலீஸ் பற்றிய தகவல் வெளியானது கோலிவுட்
    எந்த படத்தை எங்கே காணலாம்? இந்த வாரம் தியேட்டர் மற்றும் ஓடிடியில் வெளியாகவிருக்கும் படங்களின் பட்டியல் தமிழ் திரைப்படங்கள்
    ஆஸ்கார் விருது வென்ற படங்களை எந்தெந்த ஓடிடி தளங்களில் பார்க்கலாம்? ஆஸ்கார் விருது

    தமிழ் திரைப்படம்

    மற்றுமொரு முக்கோண காதல் கதையா? லைக்காவின் புதிய பட அறிவிப்பால் ரசிகர்கள் குழப்பம் திரைப்பட அறிவிப்பு
    நிலஅதிர்விலும் காஷ்மீர் படப்பிடிப்பை சூப்பராக முடித்த 'லியோ' படக்குழு; அடுத்த ஷெட்யூல் சென்னையில்! திரைப்பட அறிவிப்பு
    'பத்து தல' படத்தின் ட்ரைலர் இன்றிரவு வெளிவரும் என அறிவிப்பு; இன்று மாலை படத்தின் ஆடியோ லான்ச் நடைபெறுகிறது திரைப்பட அறிவிப்பு
    பொன்னியின் செல்வன் அப்டேட், படத்தின் ஸ்பாய்லரான மொமெண்ட்! வைரலான ட்வீட்

    பொழுதுபோக்கு செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    Entertainment Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023