
மறைந்த நடிகர் விவேக்கின் மகளுக்கு திருமணம்; அப்பாவின் ஆசைப்படி மரக்கன்றுகளை பரிசளித்த மணமக்கள்
செய்தி முன்னோட்டம்
மறைந்த நடிகர் 'சின்ன கலைவாணர்' பத்மஸ்ரீ விவேக்கின் மகள் தேஜஸ்வினிக்கு நேற்று திருமணம் நடைபெற்றது.
மிகவும் எளிதான முறையில் நடந்த இந்த திருமணத்தில் பல கோலிவுட் பிரபலங்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது. அதோடு, வந்திருந்த உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும், மணமக்கள் அளித்த ரிட்டர்ன் கிஃப்ட் தான் பலரையும் நெகிழ வைத்தது.
கலாமின் கனவை முன்னெடுத்து சென்ற விவேக் 1 கோடி மரக்கன்றுகளை நடுவதை லட்சியமாக கொண்டிருந்தார்.
அதன்படி, திருமணத்திற்கு வந்திருந்தவர்களுக்கு விவேக்கின் முகம் அச்சிடப்பட்ட பையில், மரக்கன்றுகள் பரிசாக தரப்பட்டது.
அதேபோல மணமக்களும், திருமணம் முடிந்த கையோடு, மரக்கன்றை நட்டனர். இதுகுறித்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.
embed
விவேக்கின் மகளுக்கு திருமணம்
எளிமையாக நடைபெற்ற மறைந்த நடிகர் விவேக் மகள் திருமணம் - பிரபலங்கள் வாழ்த்துhttps://t.co/wupaoCz9iu | #Wedding #Vivek #TamilCinema pic.twitter.com/2UBMO7cKXK— ABP Nadu (@abpnadu) March 28, 2024 எளிமையாக நடைபெற்ற மறைந்த நடிகர் விவேக் மகள் திருமணம் - பிரபலங்கள் வாழ்த்துhttps://t.co/wupaoCz9iu | #Wedding #Vivek #TamilCinema pic.twitter.com/2UBMO7cKXK— ABP Nadu (@abpnadu) March 28, 2024
embed
விவேக்கின் மகளுக்கு திருமணம்
#vivek #actorvivek #நடிகர்விவேக் https://t.co/POf2vFD2KJ— meenakshisundaram (@meenakshinews) March 28, 2024