
லியோ திரைப்படம் திரையிடப்பட மாட்டாது- ரோகிணி திரையரங்கு அறிவிப்பு
செய்தி முன்னோட்டம்
அக்டோபர் 19ஆம் தேதி வெளியாகும் லியோ திரைப்படம், ரோகிணி திரையரங்கில் வெளியிடப்படமாட்டாது என தகவல் வெளியாகி உள்ளது.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன், இரண்டாவது முறையாக நடிகர் விஜய் இணைந்துள்ளநிலையில், இத்திரைப்படத்திற்காக ரசிகர்கள் மத்தியில் பெருத்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்நிலையில், விஜய் ரசிகர்களின் கோட்டை என்று அழைக்கப்படும் ரோகிணி திரையரங்கில் லியோ திரைப்படம் வெளியிடப்படமாட்டாது என திரையரங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விநியோகஸ்த நிறுவனம் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் இடையே ஷேர் தொடர்பான பேச்சுவார்த்தை இன்னும் முடிவடையாதது காரணமாக சொல்லப்படுகிறது
மேலும் லியோ ட்ரெய்லர் வெளியான நாளன்று, ரோகினி திரையரங்கில் ட்ரெய்லர் ஒளிபரப்பப்பட்டது.
அதைக்காண குவிந்த ரசிகர்கள் ரோகிணி திரையரங்கை அடித்து நொறுக்கியதும், ரோகிணி திரையரங்கு லியோ திரைப்படத்தை புறக்கணித்திருப்பதற்கு காரணமாக சொல்லப்படுகிறது.
ட்விட்டர் அஞ்சல்
லியோ திரைப்படம் வெளியிடப்படமாட்டாது என திரையரங்கம் முன் வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு பலகை
BREAKING : #Leo Not Screening in Rohini Theatre Koyambedu 😕🚶.... pic.twitter.com/2UwDBPakw6
— Yuvaraj Talks (@Yuvaraj_talks) October 18, 2023