Page Loader
ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தில் கோலிவுட்டின் ஸ்டார் கிட்ஸ் இடம்பெறுவார்கள் எனத்தகவல்
ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தில் கோலிவுட்டின் ஸ்டார் கிட்ஸ் இடம்பெறுவார்கள் எனத்தகவல்

ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தில் கோலிவுட்டின் ஸ்டார் கிட்ஸ் இடம்பெறுவார்கள் எனத்தகவல்

எழுதியவர் Venkatalakshmi V
Sep 07, 2023
06:35 pm

செய்தி முன்னோட்டம்

தளபதி விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், லைகா ப்ரொடக்ஷன் தயாரிப்பில் தனது முதல் திரைப்படத்தை இயக்கவுள்ளார் என்ற அறிவிப்பு சில நாட்களுக்கு முன்னர் வெளியானது. திரையுலகினர் மற்றும் தமிழ் சினிமா ரசிகர்கள் இருவரையும் ஒரு சேர ஆச்சரியத்தில் ஆழ்த்திய இந்த அறிவிப்பை தொடர்ந்து தற்போது மேலும் சில தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, இந்த திரைப்படத்தில், பல 'ஸ்டார்கிட்ஸ்', அதாவது, கோலிவுட்டில் உள்ள பிரபலங்களின் பிள்ளைகளும் இணையவுள்ளனர் என கூறப்படுகிறது. அதாவது, படத்தின் நாயகனாக, அதர்வா முரளி, துருவ் விக்ரம், இயக்குனர் ஷங்கரின் இளைய மகன் அர்ஜித், ஹரிஷ் கல்யாண்- இவர்களில் யாரேனும் நடிக்கலாம் என கூறப்படுகிறது. அதேபோல, இசையமைக்க, ஏ.ஆர்.ரஹ்மானின் மகன் ஏ.ஆர்.அமீன் களமிறக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது.

card 2

ஜேசன் சஞ்சய் இயக்கவிருப்பது விஜய்க்கு தெரியாதா?

இதற்கிடையே, தனது மகன் ஜேசன், திரைப்படம் இயக்கப்போவது, நடிகர் விஜய்க்கே தெரியாது என ஒரு தகவல் வைரலாகி வருகிறது. ஜேசன் சஞ்சயும், அவர் தங்கை சஷாவும், லண்டனில் படித்து வருகின்றனர். தனது தாத்தாவை போலவே, ஜேசனுக்கும் இயக்குனராக வேண்டும் என்றுதான் ஆசையாம். ஆனால், அப்பா விஜய்க்கும்- மகன் ஜேசனுக்கும் நீண்ட நாட்களாக பேச்சு வார்த்தை இல்லை எனவும், எனினும் விஜயிடம் தெரிவிக்காமலையே, லைகா நிறுவனத்திடம் வாய்ப்பை பெற்றார் ஜேசன் எனவும் செய்திகள் கூறுகின்றன. அதற்கு காரணம், சங்கீதாவின் அப்பா அதாவது, ஜேசனின் தாத்தா, லண்டனில் பெரும் புள்ளியாம். அவரும், லைகா நிறுவனத்தின் உரிமையாளரும் நெருங்கிய நண்பர்களாம். அதனால், தாத்தா மூலமாக இதை வாய்ப்பை ஜேசன் பெற்றதாக கூறுகின்றனர்.