LOADING...
'கருப்பு' பட விவகாரம்: இளையராஜாவிடம் மன்னிப்பு கேட்ட ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்
கருப்பு பட விவகாரத்தில் இசைஞானி இளையராஜாவிடம் மன்னிப்பு கேட்டது ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம்.

'கருப்பு' பட விவகாரம்: இளையராஜாவிடம் மன்னிப்பு கேட்ட ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்

எழுதியவர் Vasuki
May 19, 2026
01:16 pm

செய்தி முன்னோட்டம்

தமிழ் சினிமாவின் அசைக்க முடியாத ஆளுமையான இசைஞானி இளையராஜாவின் பெயர் மற்றும் காட்சி தங்களது 'கருப்பு' திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்டது தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் இன்று அதிகாரப்பூர்வமாக ஊடக வெளியீடு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் 'கருப்பு' திரைப்படத்தில் இசைஞானி இளையராஜாவின் பெயரைப் பயன்படுத்திய காட்சி பெரும் விவாதத்தை ஏற்படுத்திய நிலையில், "அவரைப் புண்படுத்தும் உள்நோக்கம் எங்களுக்குச் சிறிதளவும் இல்லை; இதனால் அவரது ரசிகர்கள் மனம் புண்பட்டிருந்தால் எங்களது தாழ்மையான வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்" எனத் தயாரிப்பு நிறுவனமானம் தெரிவித்துள்ளது.

படக்குழு விளக்கம்

இசை அரசனை தரம் தாழ்த்தும் எண்ணமில்லை

இவ்விவகாரம் தொடர்பாக ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள ஊடக வெளியீட்டில், "எங்களது 'கருப்பு' திரைப்படத்தில் தங்களின் பெயரைப் பயன்படுத்தி வரும் காட்சி என்பது, படத்தின் கதையோட்டத்திற்குத் தேவையான ஒரு செய்தியைக் கடத்தும் நோக்கத்திற்காக மட்டுமே கையாளப்பட்ட ஒரு தற்செயல் நிகழ்வு என்று குறிப்பிட்டுள்ளது. ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழ் சினிமா மற்றும் உலக இசைத் துறையைத் தனது அசாத்திய திறமையால் ஆட்சி செய்து வரும் இளையராஜாவின் பெருமையைக் குறைக்கும் நோக்கம் தங்களுக்கு இல்லை என்பதைத் தயாரிப்பு நிறுவனம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. "இசை உலகை ஆளும் இசை அரசனை, காயப்படுத்தும் எண்ணமோ அல்லது அவரது புகழுக்குக் களங்கப்படுத்தும் எண்ணமோ படக்குழுவிற்குச் சிறிதளவும் இல்லை" என்றும் அந்த அறிக்கையில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

Advertisement