LOADING...
'டாடா' பட இயக்குநர் கணேஷ் பாபுவுடன் இணையும் கார்த்தி; 'Karthi 31' படத்தின் அப்டேட்!
'டாடா' பட இயக்குநர் கணேஷ் பாபுவுடன் இணையும் கார்த்தி

'டாடா' பட இயக்குநர் கணேஷ் பாபுவுடன் இணையும் கார்த்தி; 'Karthi 31' படத்தின் அப்டேட்!

எழுதியவர் Vasuki
Jun 20, 2026
12:32 pm

செய்தி முன்னோட்டம்

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் கார்த்தி, டாடா திரைப்படத்தின் மூலம் ஒட்டுமொத்த கோலிவுட்டையும் திரும்பிப் பார்க்க வைத்த இளம் இயக்குநர் கணேஷ் பாபுவுடன் தனது அடுத்த புதிய திரைப்படத்திற்காகக் கைகோர்க்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சூர்யதேவரா நாக வம்சியின் திரைப்பட தயாரிப்பு நிறுவனமான சித்தாரா என்டர்டெயின்மெண்ட்ஸ் பிரம்மாண்ட தயாரிப்பில், நடிகர் கார்த்தி தனது 30வது திரைப்படத்தில் தீவிரமாகப் பணியாற்றி வருகிறார். இயக்குநர் கல்யாண் ஷங்கர் இயக்கும் இப்படத்தில், கார்த்திக்கு ஜோடியாக நடிகை மீனாட்சி சௌத்ரி நடித்து வருகிறார். ஒரே சமயத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளிலும் உருவாக்கப்பட்டு வரும் '#Karthi 30' திரைப்படத்தின் முக்கிய காட்சிகள் தற்பொழுது சென்னை மற்றும் ஹைதராபாத் ஸ்டுடியோக்களில் மிக வேகமாகப் படமாக்கப்பட்டு வருகின்றன.

நடிகர் கார்த்தி 31-வது திரைப்படம்

'டாடா' பட இயக்குநர்

இந்த விறுவிறுப்பான சூழலுக்கு மத்தியில்தான், நடிகர் கார்த்தியின் அடுத்த அதிரடி புராஜெக்ட் குறித்த அதிகாரப்பூர்வமற்ற சுவாரசியத் தகவல்கள் கோலிவுட் வட்டாரத்தில் கசிந்துள்ளன. அதன்படி, கார்த்தியின் திரையுலகப் பயணத்தில் 31-வது திரைப்படமாக அமையவுள்ள புதிய படத்தை, கவின் நடிப்பில் வெளியாகிப் பிளாக்பஸ்டர் ஹிட்டடித்த டாடா திரைப்படத்தின் இயக்குநர் கணேஷ் பாபு இயக்கவுள்ளார். இது தொடர்பான இறுதிக்கட்டப் பேச்சுவார்த்தைகள் மற்றும் திரைக்கதை விவாதங்கள் தற்பொழுது தயாரிப்புத் தரப்பில் மிக ரகசியமாக நடந்து வருகிவதாகக் கூறப்படுகிறது. இந்தப் பேச்சுவார்த்தைகள் முழுமையாக முடிவடைந்த பின், இப்படத்தின் படப்பிடிப்பு இந்த 2026-ஆம் ஆண்டின் இறுதியிலோ அல்லது வரும் 2027-ஆம் ஆண்டின் தொடக்கத்திலோ முறைப்படி தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement