சூர்யாவின் கங்குவா படத்தை 80 கோடிக்கு வாங்கிய அமேசான் ப்ரைம்!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா, இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் நடித்து வருகிறார். சூர்யாவின் 42வது படமாக கங்குவா படம் உருவாகி வருகிறது. இப்படத்தின் கதை 100 ஆண்டுகளுக்கு முன் உள்ள வாழ்க்கை முறை போல் உருவாக்கப்பட்டு வருகிறது. மேலும், ஸ்டூடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி, மற்றும் யோகி பாபு என பலர் நடிக்கிறார்கள். தேவி பிரசாத் இசையமைக்கிறார். இந்நிலையில், கங்குவா படத்தின் டிஜிட்டல் உரிமையை அமேசான் நிறுவனம் 80 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளதாகவும், தென்னிந்தியாவில் 80 கோடிக்கு டிஜிட்டல் உரிமை பெற்ற முதல் படம் இதுதான் எனவும் அப்படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தெரிவித்துள்ளார்.