ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் 25வது டைட்டில் போஸ்டரை வெளியிடும் கமல்ஹாசன்
தமிழ் சினிமா உலகில் இசையமைப்பாளராகவும் நடிகராகவும் வெற்றிப்பெற்றவர் ஜி.வி.பிரகாஷ். தற்போது இசையமைப்பாளராக தனது 100வது படத்தினை எட்டவுள்ளார். அதேபோல் நடிகராகவும் தனது 25வது படத்தில் நடிக்கவுள்ளார் என்று தகவல்கள் வெளியாகின. இப்படத்தினை அறிமுக இயக்குனர் கமல் பிரகாஷ் என்பவர் இயக்கவுள்ள நிலையில், ஜி.வி.பிரகாஷே இப்படத்தினை தயாரிக்கவுள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2013ம் ஆண்டு வெளியான 'மதயானை கூட்டம்' என்னும் படத்தினை தயாரித்த ஜி.வி.பிரகாஷ், நீண்ட இடைவேளைக்கு பின்னர் மீண்டும் தனது 25வது படத்தினை தயாரிக்கிறார். இதன் படப்பிடிப்பு பணிகள் கடந்த செப்டம்பர் மாதம் முதல் துவங்கி நடந்து வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் டைட்டில் லுக் போஸ்டரை நாளை(அக்.,9) மாலை 6 மணிக்கு கமல்ஹாசன் வெளியிடவுள்ளார் என்ற அறிவிப்பினை படக்குழு அண்மையில் தெரிவித்துள்ளது.