இரண்டு பாகங்களாக வெளியாகும் கமலின் இந்தியன்-2 திரைப்படம்
செய்தி முன்னோட்டம்
ஷங்கர் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் 'இந்தியன் 2'.
அதன் முதல் பாகத்தில், கமல் ஏற்ற சேனாபதி வேடத்தையே இதிலும் ஏற்று நடித்துள்ளார்.
இந்த திரைப்படத்தின் வேலைகள் ஏறக்குறைய முடிவடைந்து விட்டது. சமீபத்தில் கமல்ஹாசன் தன்னுடைய டப்பிங் பணிகளையும் முடித்ததாக வீடியோ வெளியானது நினைவிருக்கலாம்.
இந்த நிலையில், படத்தின் நீளம் காரணமாக, இந்த திரைப்படத்தை இரண்டு பாகங்களாக வெளியிட திட்டமிட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இதற்காக, கமல்ஹாசனிடம் மேலும் 40 கால்ஷீட் பெறப்பட்டுள்ளதாம். கமலும், படத்தை இரண்டு பாகங்களாக வெளியிட சம்மதித்து விட்டாராம்.
முதல் பாகம் அடுத்த வருடம் வெளியாகவுள்ள நிலையில், இரண்டாம் பாகம் எப்போது வெளியிடப்படும் என்பது குறித்து தகவல்கள் இல்லை.
இந்தியன்-2வில், சித்தார்த், காஜல் அகர்வால், விவேக் போன்றவர்கள் நடித்துள்ளனர்.
ட்விட்டர் அஞ்சல்
இரண்டு பாகங்களாக வெளியாகும் இந்தியன் 2
#JUSTIN || இந்தியன் 3 படப்பிடிப்பிற்காக 40 நாட்கள் கால்ஷீட் தர OK சொன்ன கமல்
— Thanthi TV (@ThanthiTV) October 31, 2023
இந்தியன்-2 படத்தின் நீளம் அதிகமுள்ளதால்
2 பாகங்களாக வெளியிட முடிவு#indian2 #Indian3 pic.twitter.com/OLhyQlZYdz