Bigg Boss Tamil: பிக் பாஸிலிருந்து விலகுவதாக அறிவித்தார் கமல்ஹாசன்; என்ன காரணம்? அடுத்து யார்?
விஜய் டிவியின் பிரபல ரியாலிட்டி ஷோவான பிக் பாஸ் தமிழ். 7 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த நிகழ்ச்சி துவங்கிய காலத்திலிருந்து இதனை தொகுத்து வருகிறார் உலகநாயகன் கமல்ஹாசன். கொரோனா லாக்டவுன், மூட்டு அறுவை சிகிச்சை, உடல்நலக்குறைபாடு என எத்தனை தடங்கல்கள் வந்தாலும் அவர் இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து நடத்தி வந்தார். இந்த நிலையில் தொடர் பட வேலைகள் இருப்பதால், வரவிற்கும் அடுத்த சீசனை அவர் தொகுத்து வழங்க முடியாது என அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். தனது சமூக வலைத்தளத்தில் அவர் இந்த பதிவை வெளியிட்டுள்ளார்.
பிக் பாஸ்
அவருக்கு பதிலாக யார்?
'ஆண்டவர்' கமல்ஹாசன் இதுநாள் வரை இந்த நிகழ்ச்சியின் போட்டியாளர்களை நெறிப்படுத்தி வந்தார். மற்ற மொழிகளில்பிக்பாஸ் நிகழ்ச்சியை விட, தமிழ் நிகழ்ச்சி டீசென்ட்டாக இருந்ததற்கு கமல்ஹாசனும் ஒரு காரணம். எனினும் கடந்த சீசனில் அவர் ஒரு சார்பாக செயல்பட்டதாக குற்றசாட்டு எழுந்த நிலையில் தற்போது அவரது அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த நிலையில், அவருக்கு பதிலாக யார் தொகுத்து வழங்ககைகூடும் என்ற யூகங்களும் எழுந்துள்ளன. முன்னர் கமல் ஹாசன் படப்பிடிப்பில் பிசியாக இருந்த போது, ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கினார். அதேபோல நடிகர் சிலம்பரசனும் தொகுத்து வழங்கினார். இவர்கள் இருவரில் சிம்பு தொகுத்து வழங்கியது ரசிகர்கள் பலரையும் கவர்ந்தது. அதனால் அவரை மீண்டும் கொண்டு வர சேனல் முயற்சிக்க கூடும் என்கிறது ஊடக செய்திகள்.