Page Loader
KH 233 : OTT உரிமையை கைப்பற்றிய நெட்ஃபிளிக்ஸ்
படப்பிடிப்பு துவங்கும் முன்னரே நெட்ஃபிளிக்ஸ் நிறுவனத்திற்கு விற்கப்பட்ட KH 233

KH 233 : OTT உரிமையை கைப்பற்றிய நெட்ஃபிளிக்ஸ்

எழுதியவர் Venkatalakshmi V
Jul 05, 2023
10:02 am

செய்தி முன்னோட்டம்

கமல்ஹாசன்-ஹெச்.வினோத் கூட்டணியில் உருவாகவிருக்கும் 'KH 233' திரைப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு நேற்று வெளியானது. இத்திரைப்படத்தை கமலின், ராஜ்கமல் இன்டெர்னஷனல் நிறுவனம் தயாரிக்கிறது. படத்தை குறித்து வேறெந்த விவரங்களும் வெளியிடப்படாத நிலையில், இது விவசாயம்-அரசியல் சார்ந்த படமாக அமையும் என்ற பேச்சு பரவலாக உலவுகிறது. இதனிடையே, இத்திரைப்படம், இப்போதே பெரிய தொகைக்கு, ஒரு பிரபல ஓடிடி நிறுவனம் வாங்கி இருப்பதாக சமூகவலைத்தளத்தில் செய்திகள் வெளியாகியுள்ளன. அதன்படி, ரூ.125 கோடிக்கு 'KH 233' திரைப்படத்தை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் வாங்கி இருப்பதாகவும், தமிழ் சினிமாவில் படப்பிடிப்பிற்கு முன்னதாகவே அதிக விலைக்கு வாங்கப்பட்ட திரைப்படம் இதுவே எனவும் கூறப்படுகிறது. உலகநாயகன் கமல்ஹாசன் தற்போது 'இந்தியன்-2' படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளார். அதனால் விரைவில், KH 233-இன் படப்பிடிப்பு துவங்கலாம்.

ட்விட்டர் அஞ்சல்

நெட்ஃபிளிக்ஸ் நிறுவனத்திற்கு விற்கப்பட்ட KH 233