Page Loader
GV பிரகாஷ் பிறந்தநாள் ஸ்பெஷலாக வெளியானது 'கள்வன்' பட போஸ்டர் 
ஹாப்பி பர்த்டே GV பிரகாஷ்! வாழ்த்துக்கள் தெரிவித்த கள்வன் படக்குழுவினர்

GV பிரகாஷ் பிறந்தநாள் ஸ்பெஷலாக வெளியானது 'கள்வன்' பட போஸ்டர் 

எழுதியவர் Venkatalakshmi V
Jun 13, 2023
04:11 pm

செய்தி முன்னோட்டம்

'சிக்கு புக்கு ரயிலு' என தனது திரைப்பயணத்தை துவங்கி, தற்போது தேசிய விருது வென்ற இளம் இசையமைப்பாளர் என்ற பெருமையுடன் கோலிவுட்டில் தொடர்ந்து பல வெற்றி படங்களுக்கு இசையமைத்துவரும் GV பிரகாஷிற்கு இன்று பிறந்தநாள். அவர் இசையமைப்பாளர் மட்டுமின்றி ஒரு நடிகரும் கூட. 'டார்லிங்', 'திரிஷா இல்லேன்னா நயன்தாரா', 'நாச்சியார்' என பல படங்களில் நடித்து வரும் GV பிரகாஷ், தற்போது நடித்து வரும் திரைப்படம் 'கள்வன்'. பி.வி.ஷங்கர் என்கிற அறிமுக இயக்குனர் இயக்கும் இந்த படத்தில் மோஷன் போஸ்டர் ஏற்கனவே பலத்த வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது, GV பிரகாஷ் பிறந்தநாளை முன்னிட்டு ஒரு புதிய போஸ்ட்டரை வெளியிட்டுள்ளனர். இந்த படத்தில், 'லவ் டுடே' புகழ் இவானா நாயகியாக நடிக்கிறார்.

ட்விட்டர் அஞ்சல்

'கள்வன்' பட போஸ்டர்