NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / கொட்டுக்காளி, வாழைக்கு போட்டியாக ராயன், கல்கி 2898AD; இந்த வார ஓடிடி அப்டேட்
    அடுத்த செய்திக் கட்டுரை
    கொட்டுக்காளி, வாழைக்கு போட்டியாக ராயன், கல்கி 2898AD; இந்த வார ஓடிடி அப்டேட்
    ஓடிடி அப்டேட்

    கொட்டுக்காளி, வாழைக்கு போட்டியாக ராயன், கல்கி 2898AD; இந்த வார ஓடிடி அப்டேட்

    எழுதியவர் Sekar Chinnappan
    Aug 22, 2024
    10:34 am

    செய்தி முன்னோட்டம்

    இந்த வாரம் மாரி செல்வராஜின் வாழை உள்ளிட்ட பல்வேறு படங்கள் திரைக்கு வர உள்ள நிலையில், அதற்கு போட்டியாக ஓடிடியிலும் படங்கள் வெளியாக உள்ளதால், தமிழ் சினிமா ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.

    கோலிவுட்டில் இந்த வாரம் பெரிய நடிகர்களின் படங்கள் எதுவும் திரைக்கு வராத நிலையில், பரியேறும் பெருமாள், அசுரன், கர்ணன் உள்ளிட்ட படங்களைக் கொடுத்த மாரி செல்வராஜ் இயக்கத்தில் வாழை என்ற திரைப்பட வெளியாக உள்ளது.

    இந்த படத்தில் கலையரசன், நிகிலா விமல், திவ்யா துரைசாமி உள்ளிட்ட பலரும் நடித்துள்ள நிலையில், படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

    இதுதவிர, நடிகர் சூரி கதாநாயகனாக நடித்துள்ள கொட்டுக்காளி திரைப்படமும் இந்த வாரம் திரைக்கு வருகிறது.

    ஓடிடி அப்டேட்

    ஓடிடி வெப் சீரீஸ் உப்பு புளி காரம்

    மேலே குறிப்பிட்டுள்ள இரண்டு படங்களைத் தவிர, போகுமிடம் வெகு தூரமில்லை, அதர்ம கதைகள், சாலா ஆகிய படங்களும் இந்த வாரம் வெளியாகின்றன. இவையனைத்தும் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 23) அன்று திரைக்கு வர உள்ளன.

    இந்நிலையில், தியேட்டரில் வெளியாகும் படங்களுக்கு போட்டியாக ஓடிடி அப்டேட்களும் வந்துள்ளன. இதன்படி நடிகர் தனுஷ் தானே இயக்கி நடித்திருந்த ராயன் திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெள்ளிக்கிழமை வெளியாக உள்ளது.

    இதேபோல், மகாபாரத கதையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட கல்கி 2898AD படமும் வெள்ளிக்கிழமை பிரைம் தளத்தில் வெளியாக உள்ளது.

    மேலும், டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் நல்ல வரவேற்பைப் பெற்று வரும் உப்பு புளி காரம் சீரிஸின் அடுத்த எபிசோட் வெளியாக உள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஓடிடி
    கோலிவுட்
    சினிமா

    சமீபத்திய

    இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போர் நிறுத்தம் மே 18 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது இந்தியா
    தமிழ்நாட்டில் SSLC பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு: தேர்ச்சி விகிதம் 93.80% தமிழ்நாடு
    'Thug Life' படப்பிடிப்பு தளத்தில் கமலிடம் 'தக் லைஃப் மொமெண்ட்' காட்டிய சிம்பு; அவரே பகிர்ந்த சுவாரசிய தகவல் கமல்ஹாசன்
    மாணவர்கள் கவனத்திற்கு, SSLC மற்றும் பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு பொதுத்தேர்வு

    ஓடிடி

    உள்ளடக்கங்கள் மீது ஓடிடி தளங்களின் சுய மதிப்பீட்டை வேண்டும் மத்திய அரசின் புதிய 'ஒளிபரப்புச் சட்டம்' திரைப்படம்
    லியோ 25வது நாள்- போஸ்டர் வெளியிட்டு தயாரிப்பு நிறுவனம் பெருமிதம் லியோ
    இந்த வார திரையரங்கு மற்றும் ஓடிடி வெளியீடுகள் திரையரங்குகள்
    விரைவில் ஓடிடியில் வெளியாகும் ஜப்பான் திரைப்படம்? கார்த்தி

    கோலிவுட்

    மார்ச் மாதம் நடிகை தாப்ஸிக்கு திருமணம் நடக்கவிருப்பதாக தகவல் திருமணம்
    பழம்பெரும் நடிகர் 'அடடே' மனோகர் வயது மூப்பினால் காலமானார் நடிகர்
    தமிழ்நாட்டில் பிளாக்பஸ்டர் அடிக்கும் மலையாள திரைப்படங்கள்: ஒரு பார்வை மலையாள திரையுலகம்
    தனுஷ் நடிக்கும் இளையராஜாவின் பயோபிக் பற்றி வெளியானது அதிகாரபூர்வ அறிவிப்பு! தனுஷ்

    சினிமா

    இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு உளவியல் பரிசோதனை செய்யக்கோரி உயர்நீதிமன்றத்தில் மனு லோகேஷ் கனகராஜ்
    கேப்டன் மில்லர் விழாவில் தன்னிடம் அத்து மீறிய நபருக்கு பாடம் புகட்டிய பெண் தொகுப்பாளர் தனுஷ்
    கமலை பிரிந்ததில் வருத்தமில்லை- வைரலாகும் முன்னாள் மனைவி சரிகா தாகூரின் நேர்காணல் கமல்ஹாசன்
    கேளடி கண்மணி புகழ் குழந்தை நடிகை நீனா இப்போது என்ன செய்கிறார் தெரியுமா? நடிகைகள்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025