
'காதலிக்க நேரமில்லை': ஜெயம் ரவியின் #JR33 திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் வெளியானது
செய்தி முன்னோட்டம்
ஜெயம் ரவியின் #JR33 திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
"காதலிக்க நேரமில்லை' என தலைப்பிடப்பட்டிருக்கும் இப்படத்தை, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மனைவியும், இயக்குனருமான கிருத்திகா உதயநிதி இயக்குகிறார்.
படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நித்யா மேனன் நடிக்கிறார். ஃபர்ஸ்ட் லுக் காட்சியில் இவர்கள் இருவரும் இடம் பெற்றுள்ளனர்.
இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் படத்திற்கு இசையமைக்கும் நிலையில், ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் படத்தை தயாரிக்கிறது.
படப்பிடிப்பு தொடங்கப்பட்டு, ஏற்கனவே இரண்டு கட்ட படப்பிடிப்புகள் முடிந்துவிட்டது.
கிருத்திகா உதயநிதி முன்னர் இயக்கிய, பேப்பர் ராக்கெட் வெப் சீரிஸ் மற்றும் வணக்கம் சென்னை திரைப்படம் போல் இப்படமும், தனித்துவமான கதை அம்சம் கொண்டதாக இருக்கும் என சொல்லப்படுகிறது.
ட்விட்டர் அஞ்சல்
#JR33 திரைப்படத்தின் தலைப்பு வெளியானது
“காதலிக்க நேரமில்லை”#KadhalikkaNeramillai@actor_jayamravi @MenenNithya @astrokiru @RedGiantMovies_ @arrahman @iYogiBabu @VinayRai1809 @LalDirector @highonkokken @TJBhanuOfficial @LakshmyRamki @VinodhiniUnoffl @ManoSinger_Offl @dopgavemic @editorkishore @MShenbagamoort3… pic.twitter.com/fNLTX0K1lq
— Red Giant Movies (@RedGiantMovies_) November 29, 2023