LOADING...
அந்த டயலாக்கா? ஜீவாவின் 'தம்பி தலைவர் தலைமையில்' டீசர் வசனத்தால் சர்ச்சை

அந்த டயலாக்கா? ஜீவாவின் 'தம்பி தலைவர் தலைமையில்' டீசர் வசனத்தால் சர்ச்சை

எழுதியவர் Sekar Chinnappan
Oct 18, 2025
07:59 pm

செய்தி முன்னோட்டம்

நடிகர் ஜீவா நடித்துள்ள புதிய திரைப்படமான 'தம்பி தலைவர் தலைமையில்' படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ள அதே வேளையில், அதில் இடம்பெற்றுள்ள ஒரு வசனம் சமூக வலைதளங்களில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. முழுக்க முழுக்க நகைச்சுவையை மையமாக வைத்து மலையாளப் பட இயக்குநர் நிதிஷ் சஹாதேவ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படம், ஜீவா அரசியல்வாதியாகச் செய்யும் கலகலப்புகளையும், திருமண நிகழ்வில் நடக்கும் கலாட்டாக்களையும் டீசர் மூலம் வெளிப்படுத்துகிறது. மீனாட்சி, பிரார்த்தனா, தம்பி ராமையா உள்ளிட்டோர் நடித்துள்ள இந்தப் படத்துக்கு விஷ்ணு விஜய் இசையமைத்துள்ளார்.

வசனம்

டீசர் வசனம்

டீசரில் ஜீவா பேசும் வசனமான, 'படிச்சு படிச்சு சொன்னனேடா கண்டிஷன்ஸ ஃபாலோ பண்ணுங்கடான்னு' என்பது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. எனினும், இந்த வசனம் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. சமீபத்தில் கரூரில் நடந்த துயரச் சம்பவத்தின்போது அமைச்சர் அன்பில் மகேஷ் பேசிய அதே வசனத்தைக் கிண்டல் செய்யும் விதமாகப் படத்தில் பயன்படுத்தியிருப்பதாகச் சமூக வலைதளங்களில் பலர் விமர்சனங்களை எழுப்பி வருகின்றனர். ஒரு முக்கிய அரசியல் பிரமுகரின் உணர்ச்சிபூர்வமான பேச்சைக் கேலி செய்வது சரியா என்று சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர். இந்த டீசர் சர்ச்சையைக் கிளம்பியுள்ள நிலையில், 'தம்பி தலைவர் தலைமையில்' படத்தின் வசனம் குறித்து எழும் சர்ச்சைகளுக்குப் படக்குழு விரைவில் பதிலளிக்குமா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post