
ஜெயம் ரவியின் 'தனி ஒருவன் 2' ஷூட்டிங் ஏப்ரல் 2024 முதல் தொடங்கும் என எதிர்பார்ப்பு
செய்தி முன்னோட்டம்
நடிகர் ஜெயம் ரவி மற்றும் அவரது சகோதரரும் இயக்குநருமான மோகன் ராஜா மீண்டும் ஒருமுறை இணையும் திரைப்படம் 'தனி ஒருவன் 2'.
இவர்கள் இருவரும் கடைசியாக இணைந்து வெளியான சூப்பர்ஹிட் திரைப்படமான 'தனி ஒருவன்' படத்தின் சீக்குவல் இப்படம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இருப்பினும், படத்தை பற்றி அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகாத நிலையில் தற்போது படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது.
அதன்படி, 'தனி ஒருவன் 2' படப்பிடிப்பு ஏப்ரல் 2024-ல் தொடங்கத் திட்டமிட்டுள்ளனர்.
முதல் பாகத்தில் ஜெயம் ரவி நடித்திருந்த ஏஎஸ்பி மித்ரன் ஐபிஎஸ் கதாபாத்திரத்திலேயே தொடர்வார் எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
அதேபோல நயன்தாரா அவருக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார். இருப்பினும் வில்லனாக அமீர் கான் அல்லது அபிஷேக் பச்சன் நடிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ட்விட்டர் அஞ்சல்
'தனி ஒருவன் 2' ஷூட்டிங்
#ThaniOruvan2 shooting begins from April 2024 (Second week tentatively*)🎬💥
— Nagarajj (@IamNagarajj) December 18, 2023
- Story will be a proper extension of Part-1🤞
- Antagonist role talks going on & will be choosen someone young from other languages👊🔥
- Final stage of Music Director talks are also ON (HipHop is also… pic.twitter.com/irNo2P6PQH