'ஜீனி': 'ஜெயம்' ரவிக்கு ஜோடியாக போகும் 3 ஹீரோயின்கள்
'பொன்னியின் செல்வன்' வெற்றி களிப்பில் இருக்கும் 'ஜெயம்' ரவி, தனது அடுத்த படத்தின் ஷூட்டிங்கை இன்று பூஜையுடன் துவங்கினார். வேல்ஸ் இன்டெர்னஷனல் நிறுவனத்தின் 25 -வது தயாரிப்பான இந்த படத்தை புதுமுக இயக்குனர் புவனேஷ் அர்ஜுனன் என்பவர் இயக்குகிறார். இது ஒரு ஃபேண்டஸி திரைப்படம் எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த திரைப்படத்தில், க்ரிதி ஷெட்டி, கல்யாணி ப்ரியதர்ஷன் மற்றும் வாமிகா கெபி ஆகியோர் ஹீரோயின்களாக நடிக்கின்றனர். மேலும் நடிகை தேவயானி ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் பூஜை இன்று நடைபெற்றது. இப்படத்திற்கு இசையமைக்கவிருப்பது 'இசைப்புயல்' ஏ.ஆர்.ரஹ்மான். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய 5 மொழிகளில் ஒரே நேரத்தில், இப்படம் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.