ஜவான் திரைப்படத்தின் முதல் பாடல், 'வந்த இடம்' வெளியானது
கோலிவுட்டில் ஆர்யா, விஜய் போன்ற நடிகர்களுடன் இணைந்து வெற்றி படங்களை தந்த அட்லீ, தற்போது பாலிவுட்டில் முகாமிட்டுளார். ஹிந்தி சினிமாவில் சூப்பர்ஸ்டார் ஷாருக்கான் ஹீரோவாக நடிக்கும் 'ஜவான்' திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார். இப்படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த திரைப்படத்தில், நயன்தாரா, விஜய் சேதுபதி, ப்ரியாமணி, யோகி பாபு, தீபிகா படுகோன் மற்றும் பலர் நடித்துள்ளனர். 'ஜவான்' திரைப்படத்தின் ப்ரீவ்யூ சமீபத்தில் வெளியானது. இரு வித்தியாசமான கெட்அப்பில் ஷாருக் நடித்துள்ளார். இந்நிலையில், இந்த படத்தின் முதல் பாடல், 'வந்த இடம்' தற்போது வெளியாகியுள்ளது. இந்த படத்தின் மூலம் ஹிந்தி திரையுலகிற்கு அறிமுகமாகிறார் அனிருத்.