
தள்ளிப்போகும் ஜவான் ரிலீஸ் தேதி; காரணம் இதுதானா?
செய்தி முன்னோட்டம்
கோலிவுட் இயக்குனர் அட்லீ, தற்போது பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கானை வைத்து 'பதான்' என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார் என்பது பலரும் அறிந்திருப்பீர்கள்.
அடுத்த மாதம் வெளியாகவிருந்த இந்த திரைப்படம், தள்ளிவைக்கப்படுவதாக செய்திகள் வெளியானது. அதற்கான காரணம் தற்போது வெளியாகியுள்ளது.
இந்த திரைப்படத்திற்கான VFX வேலைகள் இன்னும் சிறிது மிச்சம் இருப்பதால், படத்தின் வெளியீட்டு தேதியை இன்னும் அறிவிக்காமல் இருக்கின்றதாம் படக்குழு.
அவசரப்பட்டு ஒரு தேதியை அறிவித்துவிட்டு, VFX வேலைகள் முடிக்கப்படவில்லை என்றால் சிக்கலாகிவிடும் என்றும் நினைக்கிறார்களாம்.
அதனால், இருவருக்கும் ஏற்றவாறு, ஜூலை இறுதியிலோ, அல்லது ஆகஸ்ட் மாதத்திலோ படத்தை வெளியிடலாம் என முடிவெடுத்துள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த படத்தை ஷாருக்கானின் தயாரிப்பு நிறுவனமான ரெட் சில்லிஸ் என்டர்டைன்மெண்ட் தான் தயாரிக்கிறது.
ட்விட்டர் அஞ்சல்
ஜவான் ரிலீஸ் ஒத்திவைப்பு
As expected #Jawan postponed from the June 2nd release !!
— AmuthaBharathi (@CinemaWithAB) May 4, 2023
August release plans as of now 💥 pic.twitter.com/IPXAiIOnAM