Loading...
'ஜனநாயகன்' முதல் நாள் வசூல் இத்தனை கோடியா?
ஜனநாயகன் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது

'ஜனநாயகன்' முதல் நாள் வசூல் இத்தனை கோடியா?

எழுதியவர் Venkatalakshmi V
Jul 24, 2026
09:46 am

செய்தி முன்னோட்டம்

எச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள அரசியல் ஆக்‌ஷன் திரைப்படமான 'ஜனநாயகன்' ஜூலை 23 அன்று திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. விஜய்யின் திரைப்பயணத்தில் இதுவே கடைசி படம் என்பதால், படம் மீதான எதிர்பார்ப்பு விண்ணைத் தொட்ட நிலையில், முதல் நாள் வசூலில் 'ஜன நாயகன்' புதிய சாதனையை படைத்துள்ளது. இப்படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜு, பிரகாஷ் ராஜ், பிரியாமணி, கெளதம் வாசுதேவ் மேனன் மற்றும் நரேன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர்.

முதல் நாள் வசூல்

இந்தியாவில் 'ஜன நாயகன்' முதல் நாள் வசூல் விவரம்

பிரபல திரை வர்த்தக தளமான Sacnilk தரவுகளின்படி, 'ஜன நாயகன்' இந்தியாவில் மட்டும் முதல் நாளில் ரூ. 41 கோடி ஈட்டியுள்ளது.

நாடு முழுவதும் சுமார் 13,067 காட்சிகளில் படம் திரையிடப்பட்டது.

தமிழ்நாட்டில் அதிகபட்ச வசூலைப் பெற்று முதலிடத்தில் உள்ளது.

அதைத் தொடர்ந்து தெலுங்கு மற்றும் ஹிந்தி பதிப்புகளிலும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

படத்திற்கு நேர்மறையான விமர்சனங்கள் கிடைத்து வருவதால், வார இறுதி நாட்களில் இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் வசூல் பல மடங்கு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உலகம் முழுவதும் முதல் நாளே ரூ. 100 கோடி கிளப்பில் இத்திரைப்படம் இணையும் என்று திரைத்துறை வல்லுநர்கள் கணித்துள்ளனர்.

தடைகள்

ரிலீஸுக்கு முன் சந்தித்த தடைகளும், போராட்டங்களும்

ஜனவரி மாதமே வெளியாக வேண்டிய இத்திரைப்படம், தணிக்கைச் சான்றிதழ் கிடைப்பதில் ஏற்பட்ட தாமதத்தால் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.

சுமார் 7 மாத போராட்டத்திற்குப் பிறகே சான்றிதழ் கிடைத்தது.

மத உணர்வுகளை புண்படுத்தும் வகையிலும், ஆயுதப்படையினரை தவறாக சித்தரிக்கும் வகையிலும் காட்சிகள் இருப்பதாகக் கூறி, பல வெட்டுகள் மற்றும் மாற்றங்களை செய்ய தணிக்கைக் குழு அறிவுறுத்தியது.

படம் வெளியாவதற்கு முன்பே இணையத்தில் லீக் செய்யப்பட்டது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அனைத்து சட்டப் போராட்டங்கள் மற்றும் தடைகளையும் தாண்டி, ஜூலை 23 அன்று வெளியான 'ஜன நாயகன்' திரைப்படத்தை விஜய் ரசிகர்கள் திரையரங்குகளில் திருவிழா போலக் கொண்டாடி வருகின்றனர்.

ADVERTISEMENT