Page Loader
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் 'ஜெய்லர்' படப்பிடிப்பு நிறைவு 
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் 'ஜெய்லர்' படப்பிடிப்பு நிறைவு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் 'ஜெய்லர்' படப்பிடிப்பு நிறைவு 

எழுதியவர் Nivetha P
Jun 01, 2023
07:38 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியா மட்டுமல்லாது உலகளவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவர் தற்போது நெல்சன் இயக்கத்தில் உருவாகிவரும் 'ஜெயிலர்'என்னும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். சன் பிச்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, யோகி பாபு, விநாயகன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர் என்று செய்திகள் தெரிவிக்கிறது. முதன்முறையாக ரஜினிக்கு ஜோடியாக இப்படத்தில் தமன்னா நடித்துள்ளார். மேலும், கன்னட முன்னணி நடிகர் சிவராஜ்குமார், மலையாள முன்னணி நடிகர் மோகன்லால் உள்ளிட்டோர் இதில் நடித்துள்ளதால் ரசிகர்கள் மத்தியில் இப்படத்தின்மீதான எதிர்பார்ப்பு பெருமளவில் அதிகரித்துள்ளது. இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் இதரப்பணிகள் யாவும் முடிந்தது என்று சன் பிச்சர்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் ஓர் புகைப்படத்தினை பதிவுச்செய்து தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.