Loading...
ஜெயிலர் 2 ஸ்பெஷல்: சன் டிவியில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ஸ்பெஷல் பேட்டி?
ஜெயிலர் 2 ரிலீஸை முன்னிட்டு ரஜினிகாந்தின் சிறப்பு நேர்காணல் சன் டிவியில் ஒளிபரப்பாகிறது.

ஜெயிலர் 2 ஸ்பெஷல்: சன் டிவியில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ஸ்பெஷல் பேட்டி?

எழுதியவர் Vasuki
Oct 06, 2026
05:01 pm

செய்தி முன்னோட்டம்

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகியுள்ள 'ஜெயிலர் 2' திரைப்படம் வரும் அக்டோபர் 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரெய்லர் இணையத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில், பட வெளியீட்டு பணிகளும் விளம்பரங்களும் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இதன் முக்கிய அங்கமாக ரஜினிகாந்தின் சிறப்பு நேர்காணல் நிகழ்ச்சி வரும் ஞாயிற்றுக்கிழமை சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது. மாலை 6:30 மணி முதல் இரவு 9:30 மணி வரை தொடர்ந்து மூன்று மணி நேரம் ஒளிபரப்பாகும் நேர்காணலில், 'ஜெயிலர் 2' உருவான விதம் மற்றும் படப்பிடிப்பு தளத்தில் நடந்த பல்வேறு சுவாரசியமான அனுபவங்களை ரஜினி நேயர்களுடன் பிரத்யேகமாகப் பகிர்ந்துள்ளார்.

ரசிகர்கள் மத்தியில் உச்சக்கட்ட எதிர்பார்ப்பு

ஆடியோ வெளியீட்டு விழாவிற்குப் பதிலாக  நேர்காணல்

பொதுவாக ரஜினிகாந்த் படங்களுக்கு ஆடியோ வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடக்கும் நிலையில், 'ஜெயிலர் 2' படத்திற்கு மாற்றாக 3 மணி நேர தொலைக்காட்சி நேர்காணல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதில் படத்தின் சிறப்புகள் மற்றும் இயக்குநர் நெல்சனுடன் மீண்டும் இணைந்த அனுபவங்கள் குறித்து ரஜினி விரிவாகப் பேசியுள்ளார்.

மோகன்லால், சிவராஜ்குமார், வித்யா பாலன், எஸ்.ஜே. சூர்யா என நட்சத்திரப் பட்டாளமே இணைந்துள்ளதால் படத்தின் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

வரும் அக்டோபர் 15 வெளியீட்டிற்கு முன்பாக, ஞாயிறு ஒளிபரப்பாகும் இந்த நேர்காணல் விளம்பரத்தை உச்சத்திற்குக் கொண்டுசெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT