Page Loader
ஜான்வி கபூர், தென் இந்திய படங்களில், குறிப்பாக விஜய் சேதுபதியுடன் நடிக்க ஆசைப்படுவதாக  கூறியுள்ளார்
ஜான்வி கபூரின் சமீபத்திய படம்

ஜான்வி கபூர், தென் இந்திய படங்களில், குறிப்பாக விஜய் சேதுபதியுடன் நடிக்க ஆசைப்படுவதாக கூறியுள்ளார்

எழுதியவர் Saranya Shankar
Dec 11, 2022
09:11 pm

செய்தி முன்னோட்டம்

தமிழ் இந்திய திரை உலகில் தனக்கு என ஒரு இடத்தை பிடித்தவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவி மற்றும் ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளில் திரைப்படம் தயாரிக்கும் தயாரிப்பாளர் 'போனி கபூர்' ஆகிய இருவரின் முதல் மகளே 'ஜான்வி கபூர்' ஆவார். 2018-ல் திரை உலகிற்கு அறிமுக ஆனா ஜான்வி கபூர், 'தடக்', 'கோஸ்ட் ஸ்டோரிஸ்', 'குஞ்சன் சக்சேனா, 'தி கார்கில் கேர்ள்', 'ரோஹி ', குட் லக் ஜெர்ரி' மற்றும் மில்லி', போன்ற ஹிந்தி படங்களில் நடித்து பாலிவுட் ரசிகர்கள் நெஞ்சில் நீங்க இடம் பெற்றுள்ளார். இவர் மிகவும் சவாலான திரைக்கதைகளை தேர்ந்து எடுத்து நடித்து வருகிறார்.

பாலிவுட் நடிகை

தமிழ் படங்களில் நடிக்க ஆசைப்படும் ஸ்ரீதேவியின் மகள் 'ஜான்வி கபூர்'

இவரின் சமீபத்தில் தமிழில் வெளியான 'கோலமாவு கோகிலா' படத்தின் இந்தி ரீமேக்கான 'குட் லக் ஜெர்ரி' என்ற ஹிந்திப் படத்தை நடித்தார். இப்படத்தின் ரீமேக்கில் நயன்தாராவின் பாத்திரத்தில் ஜான்வி கபூர் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மற்றும் நேரடி OTT வெளியீடான இந்த படம் ரசிகர்களிடமிருந்து நல்ல விமர்சனங்களைப் பெற்றது. இதன்படி, ஜான்வி கபூர் தென் இந்திய படங்கள், கோலிவுட்டில் குறிப்பாக விஜய் சேதுபதியுடன் பணியாற்ற விருப்பம் தெரிவித்தார். இச்செய்தி சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியத்தின் மூலம் கோலிவுட் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். எனவே, சீக்கிரம் ஒரு தமிழ் படத்தில் ஒப்பந்தமாகி தமிழ் திரை உலகத்திற்கு வரவேற்க நாம் காத்து இருப்போம்.