இன்று நடிகை கல்யாணி ப்ரியதர்ஷனின் 29வது பிறந்தநாள்
பிரபல இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளரான ப்ரியதர்ஷன் மற்றும் நடிகை லிஸ்ஸி ஆகியோரின் மகள் தான் கல்யாணி ப்ரியதர்ஷன். கல்யாணி பிறந்து வளர்ந்தது எல்லாம் சென்னையில் தான். அதனால், அவருக்கு தமிழ் நன்கு பரிச்சயம். பள்ளிப்படிப்பை சென்னையில் முடித்தவர், ஆர்கிடெக்ச்சர் சம்மந்தப்பட்ட மேற்படிப்பிற்காக சிங்கப்பூர் மற்றும் நியூயார்க் சென்றார். அங்கு மேடை நாடகங்களுக்கான பயிற்சியும் பெற்றார். படிப்பு முடித்த பிறகு, சென்னை திரும்பியவர், பாண்டிச்சேரியில் உள்ள அதிசக்தி என்ற நாடக குழுவிடமும் முறையாக பயிற்சி எடுத்ததாக கூறப்படுகிறது. இவர் திரையுலகில் நடிக்க வருவதற்கு முன்பு, பிரபல ஆர்ட் டைரக்டர் சாபு சிரிலுடன் பணியாற்றியுள்ளார். குறிப்பாக 'கிரிஷ் 3 ' என்ற ஹிந்தி படத்தில், இவர் சாபு சிரிலின் அசிஸ்டண்டாக இருந்துள்ளார்.
முதல் படத்திலேயே விருதுகளை குவித்தார் கல்யாணி ப்ரியதர்ஷன்
அதன் பின்னர், தமிழில், விக்ரம் இரு வேடங்களில் நடித்திருந்த 'இருமுகன்' என்ற படத்திலும் அசிஸ்டன்ட் ஆர்ட் டைரக்டராக பணியாற்றியுள்ளார். அதன் பின்னர், 'ஹலோ' என்ற தெலுங்கு படம் மூலமாக திரையுலகிற்கு ஹீரோயினாக அறிமுகம் ஆனார். முதல் படத்திலேயே முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தி, பலரின் பாராட்டை பெற்றார் கல்யாணி. அதன் பின்னர், மலையாள படவுலகிற்கு சென்ற கல்யாணி, துல்கர் சல்மான், பிரணவ் மோகன்லால் என இளம் நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து, பல வெற்றி படங்கள் தந்தார். இதனிடேயே, சிவகார்த்திகேயனுடன் 'ஹீரோ', வெங்கட் பிரபு இயக்கத்தில், சிம்புவின் கம்பேக் படமாக கருதப்படும் 'மாநாடு' திரைப்படத்தில் நடித்திருந்தார். அவர் இது வரை நடித்த கதாபாத்திரங்களிலேயே, இது சவாலான கதாபாத்திரம் என பேட்டிகளில் குறிப்பிட்டிருந்தார்.