LOADING...
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் சினிமாவை விட்டு விலகுகிறாரா? ரசிகர்கள் அதிர்ச்சி
ரஜினிகாந்த் சினிமாவை விட்டு விலகுகிறாரா?

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் சினிமாவை விட்டு விலகுகிறாரா? ரசிகர்கள் அதிர்ச்சி

எழுதியவர் Venkatalakshmi V
Oct 28, 2025
05:22 pm

செய்தி முன்னோட்டம்

தமிழ் சினிமாவின் அசைக்க முடியாத ஆளுமை சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். 74 வயதான ரஜினிகாந்த் சினிமாவில் இருந்து ஓய்வு பெற முடிவெடுத்து உள்ளதாக வலைப்பேச்சு செய்தி வெளியிட்டுள்ளது. அதன்படி ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார். அதன் படப்பிடிப்பு நிறைவு பெற்றதும், சுந்தர்.சி உடன் ஒரு படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை தயாரிக்கவிருப்பது கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம். அதைத்தொடர்ந்து அவர் கமல் உடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்க போகிறார். அதுவே அவரின் கடைசி திரைப்படமாக இருக்கும் எனவும், அதன் பின்னர் அவர் நடிப்பதிலிருந்து ஓய்வு பெற முடிவெடுத்து விட்டார் என செய்தி வெளியாகி உள்ளது. இந்த செய்தி ரசிகர்கள் மனதில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

கமல்- ரஜினி

கமல்- ரஜினி இணையும் படத்தை நெல்சன் இயக்கவுள்ளது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது

ஏற்கனவே கமல்ஹாசன் மற்றும் ரஜினி இணைந்து நடிக்கும் படத்தை நெல்சன் இயக்க வாய்ப்பு அதிகம் என நாங்கள் செய்தி வெளியிட்டிருந்தோம். அது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. இதன் படப்பிடிப்பு 2027-இல் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வலைப்பேச்சு வெளியிட்ட தகவல்படி இரு நடிகர்களும் நெல்சனின் கதைக்கு ஓகே சொல்லிவிட்டனராம். இந்தப் படம் கமல்ஹாசனின் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல்(RKFI) மூலம் உருவாகிறது என்பதை இருவருமே முன்னர் உறுதி செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. நெல்சன் கூறிய கதை, இரு நட்சத்திரங்களுக்கும் சமமான முக்கியத்துவம் கொடுக்கும் வகையிலும், ஆக்‌ஷன் அம்சங்களுடன் கூடிய ஜாலியான, வெகுஜன பொழுதுபோக்கு (fun, mass-market entertainer) படமாகவும் இருந்ததே அவரை இயக்குனராக நடிகர்கள் இருவரும் தேர்வு காரணம் என்று சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.