ஜெயிலர் படத்தின் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டதற்கு இது தான் காரணமா?
செய்தி முன்னோட்டம்
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் 'ஜெயிலர்' திரைப்படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
படத்தில், ரஜினியின் போர்ஷன்கள் அனைத்தும் முடிவடைந்தது என சமீபத்தில் நடைபெற்ற விழா மேடையில், அப்படத்தின் இயக்குனர் நெல்சன் கூறியிருந்தார்.
'ஜெயிலர்' திரைப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், படத்தின் வெளியீட்டை மேலும் சில மாதங்கள் தள்ளி வைக்க போவதாக செய்திகள் வெளியாகின.
இதற்கு பல காரணங்கள் கூறப்பட்ட நிலையில், தற்போது சுவாரசியமான ஒரு காரணம் வெளியாகி உள்ளது.
ரஜினியின் முந்தைய படம், மிகவும் எதிர்பார்க்கப்பட்டு, இதே ஆகஸ்ட் மாதம் வெளியாகி, கடும் தோல்வியை சந்தித்ததாம். அதனால், ஆகஸ்டில் எந்த படமும் வெளியாக கூடாது என ரஜினி நினைக்கிறாராம்.
card 2
ரஜினியின் யோசனைக்கு பாபா படம் தான் காரணமா?
ரஜினிகாந்தின் நிஜ வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் பாபா.
இந்த படத்தின் கதை, திரைக்கதை, வசனம், தயாரிப்பு என அனைத்தும் ரஜினி தான்.
அந்த திரைப்படம் பெரிதாக ஓடும் என எதிர்பார்த்து, 2002 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் தான் வெளியிட்டனராம். ஆனால், படம் பெறும் தோல்வி அடைந்தது, ரஜினிகாந்திற்கு பெறும் நஷ்டம் ஏற்பட்டது.
அந்த சமயம் தான், அரசியல், கட்சி, ரசிகர் மன்றம் என பல குழப்பங்களுக்கும் ஆளானார் ரஜினிகாந்த். அதனால், தன்னுடைய படங்கள் எதுவும் ஆகஸ்ட் மாதத்தில் வெளிவருவதை அவர் சென்டிமெண்டாக விரும்புவதில்லை என கூறுகிறார்கள்.
அந்த காரணத்தினால் தான், 'ஜெயிலர்' படத்தின் ரிலீஸையும் தள்ளி வைத்திருக்குகிறார்கள் என செய்திகள் தெரிவிக்கின்றன.