
கார்த்தி நடிக்கும் ஜப்பான் கதை இவரை பற்றியதா?
செய்தி முன்னோட்டம்
நடிகர் கார்த்தி நடிப்பில் சமீபத்தில் வெளியான படம், 'பொன்னியின் செல்வன்'.
வித்தியாசமான கதைகளையும், அதில் எதார்த்தமான நடிப்பையும் வெளிப்படுத்தி வருபவர் கார்த்தி.
ரொமான்ஸ், காமெடி, சண்டை காட்சிகள் என அவர் படங்கள் அனைத்துமே ஜனரஞ்சகமான தேர்வுகள் தான்.
அந்த வரிசையில் தற்போது அவர் நடித்து வரும் படம் 'ஜப்பான்'.
படத்தின் டீஸர் சில நாட்களுக்கு முன்னர், கார்த்தியின் பிறந்தநாளை ஒட்டி வெளியானது. ராஜு முருகன் இயக்கியுள்ள இந்த திரைப்படத்தின் டீஸர் மூலம், கார்த்தி ஒரு கொள்ளைக்காரன் வேடத்தில் நடிப்பது போல தோன்றுகிறது என விமர்சகர்கள் தெரிவித்தனர்.
இந்த படம் வரும் தீபாவளிக்கு ரிலீஸ் செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.
இதனிடையே இந்த படத்தை குறித்த சுவாரசிய செய்தி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
card 2
கொள்ளையன் திருவாரூர் முருகன் கதை தான் ஜப்பான் படமா?
கடந்த 2019-ஆம் ஆண்டு, தமிழ்நாட்டை உலுக்கிய திருச்சி நகைக்கடை கொள்ளை சம்பவம் நினைவிருக்கலாம்.
கிட்டத்தட்ட 13கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளை அடிக்கப்பட்ட அந்த சம்பவத்தில் துப்பு கிடைக்காமல் பல மாதங்கள் தவித்த போலீசார், எதேச்சேயாக நடைபெற்ற ஒரு வாகன சோதனையில் முக்கிய குற்றவாளியான 'திருவாரூர்' முருகனை கைது செய்தனர்.
பல முக்கிய கொள்ளை வழக்கில் தேடப்பட்ட முருகனை இறுதியாக போலீசில் கையில் அகப்பட்டபோது, அவன் அதுவரை 100 கோடிகளுக்கு மேல் பல இடத்தில் திருடியுள்ளான் என தெரியவந்தது.
கொள்ளையடித்த பணத்தில், அவன் தங்கபல் வைத்திருந்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தற்போது கார்த்தியும், இந்த படத்தில் ஒரு காட்சியில், தங்கபல் வைத்திருப்பதை கண்டு, இது அந்த கொள்ளையனின் கதை என செய்திகள் இணையத்தில் உலவ துவங்கியுள்ளது.