LOADING...
பிரபு தேவாவின் மூன் வாக் படத்தில் AR ரஹ்மான் நடிக்கிறாரா? வெளியான சுவாரசிய தகவல்
25 ஆண்டுகளுக்கு பிறகு பிரபுதேவா-ஏ.ஆர். ரஹ்மான் கூட்டணியில் உருவாகும் Moon Walk

பிரபு தேவாவின் மூன் வாக் படத்தில் AR ரஹ்மான் நடிக்கிறாரா? வெளியான சுவாரசிய தகவல்

எழுதியவர் Venkatalakshmi V
Dec 29, 2025
06:45 pm

செய்தி முன்னோட்டம்

பிரபு தேவா நடிப்பில், புதுமுக இயக்குனர் மனோஜ் என்எஸ் இயக்கத்தில், ஏ.ஆர். ரஹ்மான் இசையில் உருவாகும் திரைப்படம் 'மூன் வாக்' (Moon Walk). 25 ஆண்டுகளுக்கு பிறகு இந்த கூட்டணியில் உருவாகும் இந்த திரைப்படம் நடனத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் இந்த படம். இதில் உயர்ரக கிராபிக்ஸ் மற்றும் பிரம்மாண்டமான 5 பாடல்களுடன் ஒரு கற்பனை (Fantasy) கதையாக உருவாகி வருகிறது என செய்திகள் வெளியாகியுள்ளன. இப்படம் 2026 மே மாத கோடை விடுமுறையில் வெளியீட்டிற்கு தயாராகி வருகிறது. இந்த நிலையில் படத்தை பற்றிய சில தகவல்களையும், படத்தின் கதாபாத்திரங்களை பற்றியும் பிரபுதேவா ட்வீட் செய்துள்ளார். அதில் சுவாரசியமாக இசையமைப்பாளர் AR ரஹ்மானும் ஒரு வேடத்தில் நடித்துள்ளார் என்பது ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter PostS

முக்கிய தகவல்கள்

மூன் வாக் (Moon Walk) திரைப்படம் பற்றிய முக்கிய தகவல்கள்

இந்த படத்தில், பிரபு தேவா, யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், நிஷ்மா செங்கப்பா, சுஷ்மிதா நாயக், ரெடின் கிங்ஸ்லி, அஜு வர்கீஸ் மற்றும் அர்ஜுன் அசோகன் ஆகியோர் நடித்துள்ளனர். ஏற்கனவே தெரிவிதத்தை போல படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசை. பிரபு தேவாவின் நடன பாணியை முன்னிலைப்படுத்தும் வகையில் 5 பாடல்கள் உள்ளன. படத்தின் சிறப்பம்சமாக ஒரு பாடல் முழுமையாக விசுவல் எஃபெக்ட்ஸ் (Visual Effects) மூலம் உருவாக்கப்பட்டுள்ளது. Behindwoods வழங்கும் 'Moonwalk Musical Nights' ஜனவரி 4, 2026 அன்று சத்யபாமா பல்கலைக்கழகத்தில், ஏ.ஆர். ரஹ்மானின் பிறந்தநாளுடன் இணைந்து இந்த படத்தின் இசை வெளியீடு நடக்கவுள்ளது.

Advertisement