
'மறக்க மாட்டேன் ரஜினி சார்' - வர்மன் கதாபாத்திர நடிகர் விநாயகம் உருக்கம்
செய்தி முன்னோட்டம்
'ஜெயிலர்' திரைப்படம் யாரும் எதிர்பாரா அளவிற்கு தாறுமாறான வெற்றியினை பெற்றுள்ளது.
இந்த மாபெரும் வெற்றியினை உலகம் முழுவதுமுள்ள ரஜினி ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடி வருகிறார்கள்.
தற்போது இப்படத்தின் வசூல் ரூ.600 கோடியினை நெருங்கியுள்ளது என்று கூறப்படும் நிலையில், தயாரிப்பாளர் கலாநிதிமாறன் ரஜினிகாந்த், நெல்சன், அனிருத் உள்ளிட்டோருக்கு தனக்கு வந்த லாபத்தின் பங்குக்கான காசோலை, உயர்ரக கார் என அன்பு பரிசுகளை வழங்கி வருகிறார்.
இப்படத்தில் நடித்துள்ள அனைவரின் கதாபாத்திரமும் பேசப்படும் நிலையில், முக்கியமான வில்லன் 'வர்மன்' கதாபாத்திரத்தில் நடித்துள்ள விநாயகம் இப்படம் குறித்த தனது அனுபவத்தினையும், தனது கதாபாத்திரத்திற்கு கிடைத்துள்ள அங்கீகாரம் குறித்தும் உருக்கமாக பேசிய வீடியோவினை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் இயக்குனர் நெல்சனுக்கும், ரஜினிக்கும் தனது நன்றிகளை தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடவேண்டியவை.
ட்விட்டர் அஞ்சல்
வர்மனின் பேட்டி
#WATCH | ஜெயிலர் திரைப்படத்தில் 'வர்மன்' கதாபாத்திரத்தில் நடித்தது குறித்து பகிர்ந்த நடிகர் விநாயகன் நெகிழ்ச்சி!#SunNews | #Jailer | #Varman pic.twitter.com/uEq6XsdauA
— Sun News (@sunnewstamil) September 6, 2023