
ப.ரஞ்சித்-விக்ரமின் தங்கலானில் இணையும் ஆங்கில நடிகர் டேனியல் கால்டாகிரோன்
செய்தி முன்னோட்டம்
இயக்குனர் பா.ரஞ்சித், சீயான் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் 'தங்கலான்' படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடந்து வருகிறது. தற்போது அந்த படப்பிடிப்பு குழுவினருடன் ஒரு ஹாலிவுட் நடிகரும் இணைந்துள்ளார்.
டேனியல் கால்டாகிரோன் என்று பெயர் கொண்ட அந்த ஆங்கில நடிகர், 'Lara Croft Tomb Raider: The Cradle of Life' மற்றும் The Pianist' போன்ற ஹாலிவுட் படங்களில் நடித்துள்ளார்.
தற்போது, கர்நாடகாவில் உள்ள கோலார் தங்க வயலில் (KGF) படப்பிடிப்பு நடந்துவரும், இந்த படத்தில், விக்ரமுடன் இணைந்து, மாளவிகா மோகனன், 'பூ' பார்வதி, பசுபதி ஆகியோரும் நடிக்கின்றனர்.
ஆங்கிலேயர் ஆட்சியின் கீழ் கர்நாடகாவில் உள்ள கோலார் தங்கத் வயலில் நடைபெற்ற உண்மைச்சம்பவத்தை மையமாக வைத்து, இந்த திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ட்விட்டர் அஞ்சல்
தங்கலான் படத்தில் இணையும் ஆங்கில நடிகரை வரவேற்ற விக்ரம்
Welcoming the huntsman🔪@DanCaltagirone to the sets of #Thangalaan and social media✨@Thangalaan @beemji @kegvraja @StudioGreen2 @officialneelam pic.twitter.com/sJfr9EnpNz
— Vikram (@chiyaan) February 21, 2023