
1986 & 2022: 36 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நிஜமாகும் வரலாற்று சாதனை
செய்தி முன்னோட்டம்
உலகக்கோப்பை கால்பந்து போட்டி மிகவும் பரபரப்பாக நடந்து முடிந்தது. கிட்டத்தட்ட, 36 ஆண்டுகளுக்குப் பிறகு, கோப்பையை கைப்பற்றியிருக்கிறது அர்ஜென்டினா.
இரண்டு மணி நேர பரபரப்பான திரைப்படம் பார்ப்பது போல, நகம் கடிக்க வைத்து, பெனால்ட்டியில் 4-2 என்ற புள்ளிகள் எடுத்து, பிரான்ஸ் அணியை தோற்கடித்துள்ளது அர்ஜென்டினா.
1986 ஆம் ஆண்டுக்குப் பிறகு, இப்போது தான் அர்ஜெண்டினாவின் கனவு நிஜமாகி உள்ளது.
1986 ஆம் ஆண்டு, மாரடோனா தலைமையில் அர்ஜென்டினா அணி கால்பந்து உலகக்கோப்பை தொடரில் வெற்றி வாகை சூடியது. அதற்குப் பிறகு, இப்போது 2022 ஆம் ஆண்டு மீண்டும் மெஸ்ஸி சாதித்துக் காட்டியுள்ளார்.
ஆனால், 1986 ஆம் ஆண்டுக்கும் 2022 ஆம் ஆண்டுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது!
ட்விட்டர் அஞ்சல்
1986 & 2022
The year of 1986 in 2022..🔥#Vikram#TopGun#ARG pic.twitter.com/a0mqbZSSxW
— Laxmi Kanth (@iammoviebuff007) December 19, 2022
திரைப்படங்கள்
மீண்டும் அதே வெற்றிகள்!
1986 ஆம் ஆண்டில் வெளியான டாப் கன் என்ற ஹாலிவுட் திரைப்படம் மீண்டும் 2022 ஆம் ஆண்டு வெளியாகி உலகம் முழுவதிலும் வரவேற்பைப் பெற்றது.
Top Gun திரைப்படம் வெளியான பின்பு, நேவியில் சேர்ந்தவர்கள் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்தது. அந்த அளவுக்கு அந்தத் திரைப்படம் தேசப்பற்றை காட்சி படுத்தி இருந்தது.
அதே போல, இந்தியாவில், தமிழில் வெளியான மற்றொரு தேசபற்றை, தேசத்தைக் காப்பாற்றும் கதைக்களம் கொண்ட திரைப்படம் தான் விக்ரம்.
மறைந்த எழுத்தாளர் சுஜாதாவின் நாவலான 'விக்ரம்' என்பதை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட படம் கமலஹாசன் நடிப்பில் வெளியானது.
விக்ரம் திரைப்படத்தின் சீக்வெல், இந்த ஆண்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகி, இந்த ஆண்டின் மாபெரும் வெற்றிப்படமாக திகழ்ந்தது.