D51: தனுஷ் படத்தின் ஷூட்டிங்கால், திருப்பதியில் கடும் போக்குவரத்து நெரிசல்
நடிகர் தனுஷ் தற்போது தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலாவின் இயக்கத்தில் D51 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் காரணமாக, திருப்பதியிலுள்ள திருமலைக்கு செல்லும் பாதைகள் மூடப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இதனால் வாகனங்கள் மாற்று பாதையில் திசை திருப்பிவிடப்பட்டுள்ளன. நடிகர் தனுஷ் தன்னுடைய 50-ஆவது படத்தை இவரே இயக்கி உள்ளார். அந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததும் அடுத்தாக சேகர் கம்முலாவுடன் இணைந்துள்ளார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் இந்த திரைப்படத்தில், தனுஷ் உடன், நாகார்ஜூனாவும் நடிக்கிறார். தனுஷிற்கு ஜோடியாக ரஷ்மிகா மந்தனா நடிப்பதாகவும் கூறப்படுகிறது. இப்படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இதனை தொடர்ந்து தனுஷ், ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.