Page Loader
ஹாரீஸ் ஜெயராஜ் சொகுசு கார் வழக்கில் அபராதத் தொகைக்கு இடைக்கால தடை!
ஹாரீஸ் ஜெயராஜ் சொகுசு கார் வழக்கில் அபராதத் தொகைக்கு இடைக்கால தடை

ஹாரீஸ் ஜெயராஜ் சொகுசு கார் வழக்கில் அபராதத் தொகைக்கு இடைக்கால தடை!

எழுதியவர் Arul Jothe
Jun 01, 2023
03:25 pm

செய்தி முன்னோட்டம்

கோலிவுட்டின் பிரபல இசையமைப்பாளர் ஹாரீஸ் ஜெயராஜ் மசராட்டி எனும் சொகுசு காரை 2010ஆம் ஆண்டு வாங்கினார். மசராட்டி, Maserati Granturismo S Coupe என்று அழைக்கப்படும் இந்த கார், இத்தாலியில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டதாகும். தமிழ்நாட்டில் அந்த சொகுசு காரை ஓட்டுவதற்கு அனுமதி கோரி போக்குவரத்து அலுவலகத்தில் அவர் விண்ணப்பித்திருந்தார். ஆனால், ஹாரிஸ் ஜெயராஜ் நுழைவு வரி செலுத்தவில்லை என்று கூறிய போக்குவரத்து அலுவலகம், அந்த காரை பதிவு செய்ய மறுத்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கில் நுழைவு வரியையும், அதற்கான அபராதத்தையும் ஹாரீஸ் ஜெயராஜ் செலுத்த வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், விதிக்கப்பட்ட அபராதத் தொகைக்கு இடைக்கால தடை விதித்து உயர் நீதிமன்றம் தற்போது உத்தரவிட்டுள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

அபராதத் தொகைக்கு இடைக்கால தடை உத்தரவு