
நடிகை சாய்பல்லவியின் பிறந்தநாள்: அவரின் நடிப்பில் வெளியான, வெளியாகப்போகும் படங்களின் பட்டியல்
செய்தி முன்னோட்டம்
கோலிவுட்டின் பிரபல நடிகை சாய்பல்லவி, 2015-இல் வெளியான 'ப்ரேமம்' என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் காலடி எடுத்து வைத்தார்.
அந்த படத்தில், 'மலர் டீச்சர்' என்ற கதாபாத்திரத்தில் நடித்து பல இளைஞர்களின் மனதை வென்றார்.
மேக்அப் இல்லாத இயற்கையான அழகு, மிகையில்லாத நேர்த்தியான நடிப்பு, துள்ளலான நடனம் என சாய் பல்லவியை ரசிப்பதற்கு பல காரணங்கள் உண்டு.
அவரின் பிறந்தநாளான இன்று, அவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான படங்களும், வெளியாகவிருக்கும் படங்களின் பட்டியலும் இதோ:
கார்கி: சூர்யாவின் 2D என்டர்டைன்மெண்ட் தயாரித்த இந்த படம், பல விருதுகளை குவித்தது. ஒரு தந்தைக்கான சட்ட போராட்டத்தை எதிர்கொள்ளும் பெண்ணாக நடித்திருந்தார் சாய் பல்லவி. குழந்தைகள் மீது நடைபெறும் பாலியல் தொல்லைகள் தான் படத்தின் மையக்கரு.
card 2
சாய் பல்லவியின் நடிப்பில் வெளியாகவிருக்கும் படங்கள்
ஷியாம் சிங்க ராய்: தெலுங்கு, தமிழ் என பல மொழிகளில் வெளியான இந்த படத்தில், மேற்கு வங்காளத்தில், கோவிலில் இருக்கும் தேவதாசி பெண்ணாகவும், அந்த தடைகளை உடைத்தெறிந்து, சமூகத்தில் முன்னேறும் பெண்ணாகவும் நடித்திருந்தார்.
தற்போது, வரிசையாக அவரின் நடிப்பில் பல மொழிகளில் படங்கள் வெளியாக காத்திருக்கிறது.
SK 21 : கமல்ஹாசன் தயாரிக்கும் இந்த படத்தில், சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் சாய் பல்லவி. படத்தின் படப்பிடிப்பு சென்ற வாரம் பூஜையுடன் துவங்கியது.
புஷ்பா 2: முதல் பாகத்திலேயே இவர் நடிப்பதாக பரவலாக பேசப்பட்ட நிலையில், தற்போது புஷ்பா 2 -இல் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க போகிறார் என அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் ஷூட்டிங் வேகமாக நடைபெற்று வருகிறது.