Page Loader
தொடர்ந்து உயரும் தளபதி விஜய்யின் Salary க்ராஃப்: ஒரு பார்வை 
தளபதி விஜய்

தொடர்ந்து உயரும் தளபதி விஜய்யின் Salary க்ராஃப்: ஒரு பார்வை 

எழுதியவர் Arul Jothe
May 27, 2023
08:12 am

செய்தி முன்னோட்டம்

கோலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவர் தளபதி விஜய். நடிகர் விஜய்யின் அடுத்த படமான 'தளபதி 68' படத்திற்கு பேசப்பட்ட சம்பளம் 150 கோடி ரூபாய் என்றும், 200 கோடி என்றும் செய்திகள் வெளியாகின. 'கில்லி' படங்களின் காலத்தில், லட்சங்களில் தான் சம்பளம் வாங்கி கொண்டிருந்தார் விஜய். விஜய் நடித்த 'துப்பாக்கி' படத்தின் மூலம் '100 கிளப்'பில் நுழைந்ததும், நடிகரின் சம்பளத்தை ரூ.15 கோடியாக உயர்ந்தது. தொடர்ச்சியான வெற்றிகளுடன் நடிகர் விஜய், 'மெர்சல்' படத்திற்காக, 25 கோடி ரூபாய் சம்பளம் பெற்றதாக கூறப்படுகிறது. அடுத்து வெளியான 'சர்கார்' படத்திற்கு, 35 கோடி ரூபாய் சம்பளம் வாங்கினார். அட்லீயுடன் விஜய்யின் மூன்றாவது கூட்டணி படமான 'பிகில்' படத்திற்கு 50 கோடி பெற்றார்.

Thalapathy's salary

தளபதி விஜய்யின் சம்பளம்

விஜய்க்கு முதலில் 'மாஸ்டர்' படத்துக்கு 100 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டது. ஆனால் கொரோனா பாதிப்பால் படம் தாமதமானதால், 20 கோடியை திருப்பி கொடுத்துள்ளார். நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் தளபதி விஜய், ஒரு ஏஜெண்டாக 'பீஸ்ட்' படத்தில் நடித்தார். அதற்கு அவர் பெற்ற சம்பளம் 100 கோடி ரூபாய். 'வாரிசு' படத்திற்காக வம்சியுடன் கைகோர்த்த விஜய், இந்த குடும்ப பொழுதுபோக்கு படத்திற்காக, 110 கோடி ரூபாய் வாங்கினார். தளபதி விஜய், தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'லியோ' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு விஜய், 125 கோடி ரூபாய் வாங்கி இருப்பதாக தகவல் வெளியானது. தற்போது, வெங்கட் பிரபு இயக்கவிருக்கும், 'தளபதி 68' படத்திற்கு ரூ.150 கோடி வாங்கவுள்ளார் என கூறப்படுகிறது.