
கமலின் தக் லைஃப் திரைப்படத்தில் இணையும் கௌதம் கார்த்திக்?
செய்தி முன்னோட்டம்
கமலஹாசன் மற்றும் இயக்குனர் மணிரத்தினம் சுமார் மூன்று தசாப்தங்களுக்கு பின் இணையும் தக் லைஃப் திரைப்படத்தில், கௌதம் கார்த்திக் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த மாதம் கமலஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு, தக் லைஃப் திரைப்படத்தின் தலைப்பு மற்றும் தலைப்பு அறிவிப்பு வீடியோ வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இப்படத்தில், ஜெயம் ரவி, துல்கர் சல்மான், திரிஷா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிப்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது கௌதம் கார்த்திக் படத்தில் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது.
தக் லைஃப் திரைப்படத்தை கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க, ஏ ஆர் ரகுமான் இசையமைக்கிறார்.
படத்தின் படப்பிடிப்பு, அடுத்த ஆண்டு மத்தியில் தொடங்கும் என கூறப்படுகிறது.
ட்விட்டர் அஞ்சல்
தக் லைஃப் திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் கௌதம் கார்த்தி
Exclusive📢
— AmuthaBharathi (@CinemaWithAB) December 3, 2023
- One more exciting addition to the casting of Ulaganayagan #KamalHaasan's #Thuglife🤞
- #GauthamKarthik committed to play an important role in the movie 💥
- Already the movie has JayamRavi, DulquerSalmaan & Trisha playing pivotal characters 💫
- Shooting expected… pic.twitter.com/O2b8zifMAi