Page Loader
சத்யராஜின் 'தோழர் சேகுவேரா' திரைப்படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ 
சத்யராஜின் 'தோழர் சேகுவேரா' திரைப்படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ

சத்யராஜின் 'தோழர் சேகுவேரா' திரைப்படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ 

எழுதியவர் Nivetha P
Oct 04, 2023
06:27 pm

செய்தி முன்னோட்டம்

தமிழ் சினிமா உலகில் வில்லனாக அறிமுகமானவர் நடிகர் சத்யராஜ். 90களில் இவர் முன்னணி நடிகர்களுள் ஒருவராக இருந்த நிலையில், கதாநாயகன், குணசித்திர கதாபாத்திரம், நகைச்சுவை என பல வித பாத்திரங்களில் நடித்து மக்கள் மனதில் நீங்கா இடத்தினை பிடித்தார். தற்போது இவர் 'வெப்பன்' என்னும் படத்தில் வசந்த் ரவியுடன் நடித்து முடித்துள்ளார். 'ஜாக்சன் துரை' படத்தின் 2ம் பாகத்தில் நடித்து வருகிறார் என்று கூறப்படுகிறது. இதனிடையே இவர் இயக்குனர் அலெக்ஸ் இயக்கத்தில் 'தோழர் சேகுவேரா' என்னும் திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில் மொட்டை ராஜேந்திரன், நாஞ்சில் சம்பத் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ட்விட்டர் அஞ்சல்

வீடியோ