வெளியானது 'வணங்கான்' ஃபர்ஸ்ட் லுக் - சேறும் சகதியுமாக கையில் பிள்ளையார் மற்றும் பெரியாருடன் காட்சியளிக்கும் அருண் விஜய்
அருண் விஜய் நடிப்பில் இயக்குனர் பாலா இயக்கிய வணங்கான் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இப்போது வெளியாகி உள்ளது. தமிழ் திரையுலகில் வித்தியாசமான கதைக்களங்களை கொண்ட திரைப்படங்களை இயக்கி வரும் பாலா, தற்போது அருண் விஜயை வைத்து 'வணங்கான்' எனும் திரைப்படத்தை இயக்கி வருகிறார். உடல் முழுவதும் சேறும் சகதியுடன் வலது கையில் பெரியார் சிலையுடனும் இடது கையில் விநாயகர் சிலையுடனும் ஹீரோ அருண் விஜய் நிற்கும் காட்சியை படக்குழு ஃபர்ஸ்ட் லுக்காக வெளியிட்டுள்ளது. இந்தப் படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக ரோஷினி நடித்துள்ளார். மேலும் சமுத்திரகனி மற்றும் மிஷ்கின் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். திரைப்படத்தின் பெரும்பான்மையான படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.