LOADING...
சினிமா டூ ஆன்மீகம்! நாளைய மனிதன் புகழ் தக்காளி சீனிவாசன் காலமானார்; கோலிவுட்டில் ஒரு சகாப்தம் முடிவு
அறிவியல் மற்றும் த்ரில்லர் படங்களின் நாயகனான திரைப்படக் கலைஞர் தக்காளி சீனிவாசன் காலமானார்

சினிமா டூ ஆன்மீகம்! நாளைய மனிதன் புகழ் தக்காளி சீனிவாசன் காலமானார்; கோலிவுட்டில் ஒரு சகாப்தம் முடிவு

எழுதியவர் Sekar Chinnappan
Mar 11, 2026
12:17 pm

செய்தி முன்னோட்டம்

தமிழ் சினிமாவின் மூத்த இயக்குநரும், தயாரிப்பாளரும், இசைக்கமைப்பாளருமான தக்காளி சீனிவாசன், உடல்நலக்குறைவு காரணமாக மார்ச் 10, 2026 அன்று பெங்களூரில் காலமானார். 1980 மற்றும் 90-களில் தமிழ் சினிமாவில் அறிவியல் புனைக்கதை மற்றும் திரில்லர் வகைத் திரைப்படங்களில் புதிய முயற்சிகளை மேற்கொண்டவர் இவர். இவரது மறைவு கோலிவுட் வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுமைகள்

புதுமையான திரைப்படங்கள் மற்றும் தயாரிப்புகள்

தக்காளி சீனிவாசன் தமிழ் சினிமாவில் வழக்கமான கதைகளுக்கு அப்பாற்பட்டு புதிய பாணிகளை அறிமுகப்படுத்தியவர். 1987 இல் 'இவர்கள் வருங்காலத் தூண்கள்' என்ற படத்தை முதன்முதலில் தயாரித்தார். அதனைத் தொடர்ந்து இவர் தயாரித்த 'நாளைய மனிதன்' மற்றும் அதன் இரண்டாம் பாகமான 'அதிசய மனிதன்' ஆகிய படங்கள் தமிழில் அறிவியல் புனைக்கதை படங்களுக்கான முக்கிய மைல்கற்களாக அமைந்தன. மேலும், ஹாலிவுட் கிளாசிக் படமான 'தி ஓமன்' திரைப்படத்தின் தழுவலான 'ஜென்ம நட்சத்திரம்' என்ற படத்தை இயக்கி, தமிழ் ரசிகர்களுக்கு ஒரு புதிய திகில் அனுபவத்தைக் கொடுத்தார்.

இசைப் பயணம்

இசைப் பயணம் மற்றும் ஆன்மீக மாற்றம்

திரைப்பட உருவாக்கம் மட்டுமின்றி, இசையமைப்பாளராகவும் தக்காளி சீனிவாசன் முத்திரை பதித்தார். 'பிரேமி - ஸ்ரீனி' என்ற பெயரில் தனது கூட்டாளியுடன் இணைந்து பல படங்களுக்கு இசையமைத்துள்ளார். குறிப்பாக 'நாளைய மனிதன்' மற்றும் 'புதிய கோலி' போன்ற படங்களில் இவரது இசை காட்சிகளின் விறுவிறுப்பை அதிகரிக்கச் செய்தது. திரையுலகில் உச்சத்தில் இருந்தபோதிலும், ஒரு கட்டத்தில் சினிமாவை விட்டு விலகி ஆன்மீகம் மற்றும் சமூக சேவைகளில் தனது கவனத்தைச் செலுத்தத் தொடங்கினார்.

Advertisement

இறுதி காலம்

மனிதாபிமானப் பணிகள் மற்றும் இறுதி காலம்

வாழ்வின் பிற்பகுதியில் சினிமா வெளிச்சத்திலிருந்து விலகிய அவர், ஆதரவற்ற குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்ப்பதற்காக ஒரு ஆசிரமத்தை நிறுவினார். உதவி தேவைப்படும் எளிய மக்களுக்காகத் தனது வாழ்வை அர்ப்பணித்த அவர், ஆன்மீகப் பாதையில் அமைதியான வாழ்க்கையை மேற்கொண்டார். ஒரு சிறந்த தொழில்நுட்பக் கலைஞராகத் திரையுலகிற்குப் பங்காற்றியது மட்டுமின்றி, ஒரு சிறந்த மனிதாபிமானியாகவும் அவர் விட்டுச் சென்றுள்ள தாக்கம் என்றும் நிலைத்திருக்கும்.

Advertisement