Page Loader
அனுஷ்காவின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்
அனுஷ்காவின் புகைப்படத்தை பார்த்து அதிர்ந்த ரசிகர்கள்

அனுஷ்காவின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்

எழுதியவர் Venkatalakshmi V
Feb 21, 2023
02:13 pm

செய்தி முன்னோட்டம்

நடிகை அனுஷ்காவின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதில் அனுஷ்கா, 'இஞ்சி இடுப்பழகி' படத்தில் வந்ததை போன்ற அதே உடல் தோற்றத்துடன் இருப்பதை பார்த்த ரசிகர்கள், அதிர்ச்சி அடைந்துள்ளனர். அனுஷ்கா, இஞ்சி இடுப்பழகி படத்திற்காக எடையை கூட்டினார். ஆனால், துரதிருஷ்டவசமாக அதன் பிறகு, அவரால், பழைய நிலைமைக்கு வரமுடியவில்லை. அதன் பின்னர் வெளியான 'சைலென்ஸ்' என்ற படத்திலும், அனுஷ்கா அதே உடல் அமைப்பில் இருந்தார். அதன்பிறகு, நீண்ட இடைவேளை எடுத்துக்கொண்டவர், உடல்எடை குறைப்பில் ஈடுபட்டுள்ளதாகவும், புதிய படம் ஒன்றில் நடிக்கவிருப்பதாகவும் செய்திகள் வெளிவந்தன. இந்நிலையில், சமீபத்தில் நடந்த சிவராத்திரி பூஜையில், அனுஷ்கா கலந்து கொண்டது போல ஒரு புகைப்படம் வெளியாக, பழைய அனுஷ்காவை எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிச்சம்!

ட்விட்டர் அஞ்சல்

அனுஷ்காவின் லேட்டஸ்ட் புகைப்படம்!