Loading...
செல்ஃபி எடுக்கும்போது ரச்சிதா ராமின் கன்னத்தைக் கிள்ளிய ரசிகர்: வைரல் வீடியோ
கன்னடத் திரையுலகின் முன்னணி நடிகை ரச்சிதா ராம்

செல்ஃபி எடுக்கும்போது ரச்சிதா ராமின் கன்னத்தைக் கிள்ளிய ரசிகர்: வைரல் வீடியோ

எழுதியவர் Vasuki
Oct 03, 2026
09:44 pm

செய்தி முன்னோட்டம்

தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது செல்ஃபி எடுக்க வந்த ரசிகர் ஒருவர் கன்னட நடிகை ரச்சிதா ராமின் கன்னத்தைக் கிள்ளிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. கன்னடத் திரையுலகின் முன்னணி நடிகையான ரச்சிதா ராம், தனது பிறந்தநாளையொட்டி ரசிகர்களை நேரில் சந்தித்தார். அந்தச் சந்திப்பின் போது, செல்ஃபி எடுப்பது போல் பாவனை செய்த ரசிகர் ஒருவர் திடீரென நடிகை ரச்சிதா ராமின் கன்னத்தைக் கிள்ளியுள்ளார். எதிர்பாராத இந்தச் செயலால் ஒரு கணம் அதிர்ச்சியடைந்த நடிகை, உடனடியாகச் சுதாரித்துக் கொண்டு புன்னகையுடன் நிகழ்வைத் தொடர்ந்தார். இதே கொண்டாட்டத்தின் போது மற்றொரு ரசிகர் எல்லை மீறி அவரைக் கட்டிப்பிடிக்க முயன்றபோது, தன்னைத் தொட வேண்டாம் எனக் கூறி அவருக்கு நடிகை எச்சரிக்கை விடுத்த நிகழ்வும் அரங்கேறியது.

 ரசிகர்களின் அன்பு

நடிகை ரச்சிதா ராம் விளக்கம்

ரசிகர் ஒருவர் ரச்சிதா ராமின் கன்னத்தைக் கிள்ளும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகித் தீயாகப் பரவியது.

சிலர் இதனை ஒரு ரசிகரின் அதீத அன்பின் வெளிப்பாடு எனக் குறிப்பிட்டாலும், பலரும் பொதுவெளியில் பிரபலமாக இருந்தாலும் அவர்களின் அனுமதியின்றி தொடுவது அத்துமீறல் என்றும் எல்லை மீறிய செயல் என்றும் விமர்சித்தனர்.

இது தொடர்பாகத் தனது நண்பர்கள் தன்னிடம் கேட்டபோது விளக்கமளித்த ரச்சிதா ராம், அதை நான் எதிர்மறையாகப் பார்க்கவில்லை சிறு குழந்தைகளைக் கொஞ்சுவது போல் ஒரு பாச உணர்விலேயே அந்த ரசிகர் அவ்வாறு செய்தார் எனப் புரிந்து கொண்டேன்.

அது தவறான தொடுதலாக இருந்திருந்தால் நிச்சயம் கண்டித்திருப்பேன் ஆனால் பாசத்தில் செய்ததால் எனக்கு அதில் எந்த வருத்தமும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

வீடியோ வைரல்

இணையத்தில் தொடரும் ஆதரவும் எதிர்ப்பும்

ரச்சிதா ராம் இந்த விவகாரத்தை இயல்பாக எடுத்துக்கொண்ட போதிலும், இணையவாசிகளிடையே இருவேறு கருத்துகள் நிலவி வருகின்றன.

ஒரு தரப்பினர் ரசிகர்களின் அன்பை நடிகை புரிந்து கொண்ட விதம் பெருந்தன்மையானது எனப் பாராட்டியுள்ளனர்.

அதே சமயம் மற்றொரு தரப்பினர், ரசிகராக இருப்பதற்காக எந்த ஒரு பொது பிரபலம் அல்லது பெண்ணின் அனுமதியின்றி அவரது உடலைத் தொடுவதற்கு யாருக்கும் உரிமை கிடையாது என்று சுட்டிக்காட்டி, பிரபலங்களின் பாதுகாப்பு மற்றும் தனிநபர் எல்லைகள் மதிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

ADVERTISEMENT