NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / பிரபல குணசித்திர நடிகரான ஆர்.எஸ்.சிவாஜி மரணம்
    பிரபல குணசித்திர நடிகரான ஆர்.எஸ்.சிவாஜி மரணம்
    பொழுதுபோக்கு

    பிரபல குணசித்திர நடிகரான ஆர்.எஸ்.சிவாஜி மரணம்

    எழுதியவர் Nivetha P
    September 02, 2023 | 12:52 pm 1 நிமிட வாசிப்பு
    பிரபல குணசித்திர நடிகரான ஆர்.எஸ்.சிவாஜி மரணம்
    பிரபல குணசித்திர நடிகரான ஆர்.எஸ்.சிவாஜி மரணம்

    1981ம் ஆண்டு தமிழ் சினிமா உலகில் 'பன்னீர் புஷ்பங்கள்' என்னும் படம் மூலம் அறிமுகமானவர் தான் நடிகர் ஆர்.எஸ்.சிவாஜி(66). இவர் ஆரம்பகாலத்தில் நடிகர் கமல்ஹாசன் படங்களில் அதிகம் நடித்து கவனத்தினை ஈர்த்தவராவார். 'அபூர்வ சகோதரர்கள்'படத்தில் போலீஸ் கான்ஸ்டேபிள் கதாபாத்திரத்தில் நடித்திருந்த இவரின் 'சார் நீங்க எங்கயோ போயிட்டிங்க' என்னும் வசனம் இன்றளவும் நம்மால் ரசிக்காமல் இருக்க முடியாது. மேலும் அவர் காமெடி நடிகராகவும், குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்து மக்கள் மத்தியில் ஓர் அங்கீகாரத்தினை பெற்றார். இவர் இயக்குனரும், நடிகருமான சந்தான பாரதியின் சகோதரர் என்பது குறிப்பிடவேண்டியவை. அதுமட்டுமல்லாமல் கமல்ஹாசனின் நெருங்கிய நண்பர் என கூறப்படும் இவர் பல ஆண்டுகளாக 'ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டெர்நேஷனல்' நிறுவனத்தின் நிர்வாக தயாரிப்பாளராக பணியாற்றியுள்ளார் என்று கூறப்படுகிறது.

    இறுதிச்சடங்குகள் சென்னை வளசரவாக்கத்திலுள்ள இல்லத்தில் நடைபெறும் என தகவல் 

    அதனை தொடர்ந்து இவர், சவுண்ட் டிசைனர், உதவி இயக்குனர் போன்ற பல துறைகளிலும் பணியாற்றி வந்துள்ளார். கோலமாவு கோகிலா, சூரரை போற்று, தாராள பிரபு உள்ளிட்ட படங்களில் நடித்து வந்த இவர் 'கார்கி' படத்தில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பினையும் வாழ்த்துக்களையும் பெற்றார். இவர் கடைசியாக யோகிபாபுவிடன் இணைந்து நடித்த 'லக்கி மேன்' திரைப்படம் தற்போது திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கிறது. நேற்று(செப்.,1) சென்னையில் நடந்த உலக சினிமா என்னும் விழாவில் பங்கேற்ற இவர் இன்று(செப்.,2) காலை உடல்நலக்குறைவால் காலமானார் என்று செய்திகள் வெளியாகியுள்ளது. இவரின் இறுதிச்சடங்குகள் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சினிமா
    கமல்ஹாசன்
    சென்னை

    சினிமா

    தளபதி 68 : LA -வில் வெற்றிகரமாக 3D ஸ்கேன் முடிந்ததை அறிவித்த இயக்குனர் வெங்கட் பிரபு  நடிகர் விஜய்
    100 வருடத்தில் இதுதான் முதல் முறை; இந்திய தயாரிப்பாளர்கள் சங்கம் வெளியிட்ட அறிக்கை திரைப்படம்
    நடிகை ஸ்ரீதேவியின் பிறந்தநாளுக்கு டூடுல் மூலம் வாழ்த்து தெரிவித்த கூகுள் ஸ்ரீதேவி
    'சித்தப்பு' சரணவனுக்கும், ரஜினிக்கும் இருக்கும் இந்த சுவாரஸ்யமான தொடர்பு பற்றி தெரியுமா? ரஜினிகாந்த்

    கமல்ஹாசன்

    சொகுசு கார் வாங்கிய 'விக்ரம்' பட இயக்குனர் - வைரலாகும் புகைப்படங்கள்  லோகேஷ் கனகராஜ்
    விக்ரம் vs ஜெயிலர் - இரண்டு படங்களுக்கு இடையேயான ஒற்றுமைகள் ஓர் பார்வை ரஜினிகாந்த்
    சுதந்திர தினத்தன்று வெளியான இந்தியன் 2 புதிய போஸ்டர் இந்தியன் 2
    64 வருடங்களாக தமிழ் திரை உலகை கலக்கும் 'உலக நாயகன்' கமல்ஹாசன் கோலிவுட்

    சென்னை

    15 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை - வானிலை ஆய்வு மையம்  கனமழை
    ரத்த அழுத்தம், இதயத்துடிப்பை கண்காணிக்கும் நவீன மோதிரம்: முன்னாள் IIT மாணவர்கள் சாதனை ஐஐடி
    சென்னை மெட்ரோ ரயில் சேவை பாதிப்பு, பயணிகள் அவதி  மெட்ரோ
    சென்னையில் நடைபெற்ற ஜவான் இசைவெளியீட்டு விழா சிறப்பம்சங்கள்  இசை வெளியீடு
    அடுத்த செய்திக் கட்டுரை

    பொழுதுபோக்கு செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    Entertainment Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023